ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுதல் Yuma, Arizona, USA 65-1204 1உங்கள் அழைப்பை ஏற்று மறுபடியும் யூமாவுக்கு நான் வந்துள்ளதை ஒரு சிறந்த சிலாக்கியமாகக் கருதுகின்றேன். சென்ற முறை நான் இங்கு வந்திருந்த போது, அருமையான கூட்டங்கள் நிகழ்ந்தன. மறுபடியும் நான் இங்கு வரவேண்டுமென்பதை அறிந்தபோது, அதிக மகிழ்ச்சி அடைந்தேன். மக்கள் கூறும் சாட்சிகளைக் கேட்கும்போது, அது நம்மை சற்று ஆவியில் உயரச் செய்கின்றது. 2பில்லி என்னிடம் ஒரு சகோதரன் லாஸ் வேகாஸிலிருந்து (Las Vegas) வந்திருக்கிறார் என்றும், நான் அங்கு உள்ள சபையில் கூட்டம் நடத்த வேண்டும் என்று விரும்புகிறார் என்றும் ஆகையால் ஆராதனை முடிந்த உடன் அவரை நான் பார்க்க வேண்டும் என்று கூறினான். பீனிக்ஸ் கூட்டங்களுக்கு முன்பாக (பாருங்கள்?) ஜனவரி மாதத்தில் லாஸ் வேகாஸிற்கு வர உங்களுக்கு நேரமிருக்கிறது என்று அந்த சகோதரர் கூறியிருக்கிறார். நாங்கள் அங்கு செல்ல வேண்டும் என்பதே எப்பொழுதும் எங்கள் விருப்பமாயிருக்கிறது. நீண்ட நாட்களுக்கு முன்பாக சகோ. ஆர்ட் வில்சன் அங்கு இருந்தார் என்று நான் நம்புகிறேன். அல்லது இன்னும் அங்கே இருப்பார். அவரும், சகோதரி வில்சனும் என்னை அழைத்தார்கள். ஆனால் எனக்கு அங்கே செல்ல சமயம் கிடைக்கவில்லை. ஆகையால் இந்த சமயத்தில் நான் அங்கு போகலாம். நீங்கள் பில்லி பாலையோ, அல்லது சகோ. ராய் பார்டர்ஸையோ - இங்கு எங்கோ இருக்கிறார் என்று நினைக்கிறேன். சகோ. ராய் உள்ளே இருக்கின்றார் என்று யாரோ ஒருவர் சொன்னார். சகோ. பியர்ரீ, லீ (Lee) யாராவது ஒருவரை சந்திக்கலாம். நாங்கள் வருகின்ற தேதியை அவர்கள் நிர்ணயிப்பார்கள். 3போதகர் அநேகரை இங்கு காண்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் ஒவ்வொருவருடனும் உங்கள் வீட்டிற்குச் செல்ல எனக்கு நேரம் கிடைத்தால் நலமாயிருக்கும். ஏனெனில் உங்கள் இல்லங்களில் சிறந்த சமையற்காரர் உண்டு என்பதை அறிவேன். அது நல்லது நான்... இன்றிரவு சகோ. பெர்ரீயின் மேல் உண்மையாக இரண்டு காரியங்கள் உள்ளன. இப்பொழுது அவருக்கு எதிராக இரண்டு காரரியங்கள் உள்ளன. அவைகளில் என்று, அங்கே இருக்கின்ற அந்த மின்சார ஒலிபெருக்கியை துண்டித்ததாகும். சகோ. பெர்ரீ நீ அதைச் செய்ததற்காக குற்றவாளி ஆகிறீர். நீர் உண்மையாகவே குற்றவாளியல்ல என்று நான் கருதுகிறேன். ஆனால் நீர், ''யாரோ பேசுவதற்காக இணைத்தீர்“. அது ஒரு நல்ல காரியம். அதன் பிறகு மீண்டும் அவர் வெளியே சென்று அங்கே பேசிக் கொண்டிருந்தார். அவர் கூறினார் அவர் சகோ. காலின்ஸிடமோ, அல்லது அங்கிருந்த யாரிடமோ “இரவு நேர உணவு அருமையாக இருந்தது,” என்று சொல்லிக் கொண்டிருந்தார். மேலும் அவர், ''நான் உங்களிடம் ஒன்று கூறுகிறேன்; அந்த மனிதன் ஸ்பெயின் தேசத்தானோ, அல்லது மெக்ஸிகன் நாட்டைச் சார்ந்தவனாக இருக்க வேண்டும்“. இதுவே நான் ருசி பார்த்தவைகளிலேயே மிகவும் காரமான மிளகு இதுதான் என்றார். இப்படியாக அவர் பேசிக் கொண்டே இருந்தார்; அவர் பேசிக் கொண்டிருந்தது சமையற்காரரிடம். அவர் “நான் தான் சமையற்காரன்,'' என்றார். அது உனக்கு டெக்ஸாஸாயாயிருக்கிறது. அவர் நம்முடனே கூட இருந்தால், இந்த அரிசோனாவிலே கொஞ்ச நேரத்திலே அவரை நாம் சரிபடுத்திவிடலாம். இங்கே இருப்பது மிகவும் அருமையானது. அவை ஏதோ பரிகாசமாக தொனிக்கவில்லை என்று நான் யூகிக்கிறேன். ஆனால் அது நகைச்சுவை உணர்வு. கர்த்தருக்கே அந்த நகைச்சுவை உணர்வு இருந்தது, என்பதை நீங்கள் அறிவீர்கள். ஏரோது... போய் அந்த நரியிடம் சொல்லுங்கள் என்றார். (பாருங்கள்?) இன்றைக்கு நான் துரத்தி, இனிமேல் பிசாசுகளைத் துரத்துவதில்லை... நான் பரிபூரணமானேன். என்றார். ஆகையால் அவரிடத்தில் நகைச்சுவை உணர்வு இருந்திருக்குமானால், ஏன் எப்பொழுதாவது ஒருமுறை பேசுகையில் அது நம்மை பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. 4இப்பொழுது, கொஞ்ச காலதாமதமாகிவிட்டது. வழக்கமாக நான் நான்கு மணி நேரத்திற்கு பிரசங்கிப்பேன். எனவே, இங்கே இந்த குழுவிலிருக்கும் சகோதர, சகோதரிகளின் உபசாரத்தை அறிந்து, நாம் இன்றிரவு பிரசங்கத்தை குறைத்துக் கொள்ளலாம். ஆம், நான் டெரீயினிடத்தில் கூறினேன்… அவர், “என்ன… இரண்டு மணிநேரத்திற்கு ஒலிநாடா பதிவு போதுமா?” என்றார். நான், “இல்லை, டெரீ, இது ஒரு உபசரிப்பு கூட்டம்,” என்றேன். நான், “கிட்டதட்ட முப்பது, நாற்பது நிமிடங்களுக்கு இந்த மக்களிடத்தில் ஒரு காரியத்தை பேசி… அதை அறிந்து… ஒவ்வொரு முறையும் அதை நான் முயற்ச்சிக்கிறேன்,” என்றேன். 5நான் ஒரு சிறுவனாக பிரசங்கம் செய்தபோது, ஒரு சிறுவன் பிரசங்கிப்பதைக் கேட்க ஜனங்கள் வந்தனர். அவர்கள், ''பில்லி பிரான்ஹாம் ஒரு சிறு பையன். அவன் பள்ளி கல்வியும் கூட படித்து முடிக்கவில்லை, அவன் படிக்கவேயில்லை'' என்றெல்லாம் கூறுவார்கள். அவர்கள் நான் பேசும் கொச்சை கென்டக்கி நாட்டு கூட்டத்தில், “நாம் அனைவரும் எழுந்து நின்று தேசிய கீதத்தைப் பாடுவோம்'' என்று அறிவிக்கப்பட்டபோது, நான் எழுந்து நின்று, ''தூரத்திலுள்ள என் கென்டக்கி வீடு“, என்னும் பாட்டைப் பாடினேன். என்னைப் பொறுத்தவரையில், அதுதான் தேசிய கீதம். 6நான் சற்று வயது அதிகமானவனாய் பிரசங்கம் செய்தபோது முன்னைக் காட்டிலும் நன்றாக பிரசங்கிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பவுல் அப்போஸ்தலன், நான் குழந்தையாயிருந்த போது குழந்தையைப் போலப் பேசினேன், குழந்தையைப் போலச் சிந்தித்தேன், குழந்தையைப் போல யோசித்தேன், நான் புருஷனான போதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்“ (1 கொரி. 13:11) என்றான். நாம் குழந்தைகளாக இருக்கும் போது, குழந்தைகளைப் போன்ற தன்மைகளைப் பெற்றிருக்கின்றோம். ஆனால் நாம் வளரத் தொடங்கும்போது, அடி எடுத்து வைக்க நடக்க முயல்கிறோம். அவ்வமயம் நாம் விழுந்து போவதுண்டு. ஆயினும், நாம் மறுபடியும் எழுந்து நடக்க முயல்கிறோம். பின்னர் நாம் நேராக நடக்கிறோம் என்னும் நிலையில் அதைதான் நாம் செய்ய வேண்டும். சிலுவையின் வீரர்களாக நாம் நேர்க் கோட்டில் நடக்க நமக்கு சமயம் வந்துவிட்டது. மகிமைக்கு நம்மைக் கொண்டு செல்லும் வீதியில் நாம் நேராக நடக்கவேண்டும். 7உலக வரலாறு முடிவுபெறும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம் என்பதை நான் முற்றிலும் நம்புகிறேன். கர்த்தரின் வருகை நாம் நினைப்பதைக் காட்டிலும் மிக அருகாமையில் இருக்கின்றது என்பதை நான் உண்மையாக விசுவாசிக்கிறேன். உங்கள் நேரத்தில் 30 நிமிடங்கள் தருவீர்களானால், நான் பேசவிருக்கும் பொருளுக்கு ஆதாரமாக ஒரு வேத வாக்கியத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன். வேறு சில வேத வாக்கியங்களையும் நான் குறிப்பிடுவேன். அன்றொரு நாள் நான் வீட்டில் அமர்ந்து இவ்வேத வாக்கியங்களைக் குறித்து ஆலோசனை செய்து கொண்டிருந்த போது, “இவ்வசனம் அளிக்கும் எல்லா பொருளையும் பேச முடியாவிட்டாலும் ஒரு சில காரியங்களை மாத்திரம் இத்தகைய சுருக்கமான ஆராதனைகளில் பேசலாம்'' என்று கருதினேன். உங்கள் வேத புத்தகங்களை சங்கீதம் 27-க்கு திருப்பிக் கொண்டிருக்கும் போது சில விஷயங்களை உங்களிடம் கூற விரும்புகிறேன். அந்த சங்கீதத்தின் முதல் ஐந்து வசனங்களை நாம் படிக்கலாம். 8இந்த முழு சுவிசேஷ வியாபாரிகளின் ஐக்கியத்தைப் பற்றி சிலவற்றைக் கூற விரும்புகிறேன். வெளியாகியுள்ள புதிய புத்தகங்களைக் குறித்து சகோதரன் பியரி கிரீன் இப்பொழுது கூறினார். பீனிக்ஸ் பட்டினத்தில் நடந்த கன்வென்ஷன் கூட்டங்கள் ஒன்றில் பிரசங்கிக்கப்பட்ட, “ஐயன்மீர் இதுவா சமயம்?” (Sir what time is it?) என்னும் செய்தியை உங்களில் எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கின்றீர்கள்? இந்த புத்தகம் அச்செய்தியுடன் ஆரம்பமாகின்றது. தேவனால் எழுதி வைக்கப்பட்டுள்ள வார்த்தை இக்காலத்தில் அநேக அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் உறுதிபடுத்தப்பட்டு வருகின்ற காரணத்தால், ஏதோ ஒன்று நம்மை அணுகி வருகின்றது என்பதை நாம் மறுக்க முடியாது. அது மிகவும் தத்ரூபமாயிருக்கும். தற்சமயம் என்ன நேர்ந்து வருகின்றது என்பதை நீங்கள் அறிந்தால் வியப்படைவீர்கள். இக்காலத்துக்குரிய செய்தியைப் பற்றி இந்த மனிதர் சற்று முன்பு பேசினதை இச்செய்திக்கு அறிமுகமாகாத உங்களில் அநேகர் முதன் முறையாக கேட்டிருப்பீர்கள். தேவன் இக்காலத்திற்கென வாக்குத்தத்தம் செய்துள்ளதைக் குறித்தே... அவர் என்ன செய்வார் என்பதைக் குறித்து, அவர்கள் பிரசங்கித்தனர். என்ன செய்வாரென்று அவர் கூறியுள்ளதும், அதை செய்ய அவர் கடைபிடிக்கும் முறைமையும், அவர் கூறியது போன்றே நிறைவேறி வருவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அவர் அதை அந்தப்படியே முன்னறிவித்தார். ஏனெனில் அவர் தேவனாயிருக்கிறார். 9யாராகிலும் ஒருவர் ஒரு சம்பவம் எதிர்காலத்தில் நிறைவேறும் என்று முன்னறிவித்தால், அது அவ்வாறே நிறைவேற ஒரு கோடியில் ஒரு பாகம் மாத்திரமே வாய்ப்புண்டு. இதனுடன், எவ்விடத்தில் அது நிகழும் என்னும் விவரத்தையும் அவர் சேர்த்து முன்னறிவித்தால், அது பத்து கோடியில் ஒரு பாகமே நிறைவேற வாய்ப்புண்டாகும். ஒவ்வொரு விவரத்தையும் இவ்வாறே சேர்த்து முன்னறிவித்தால் முன்னறிவித்தபடியே, அது நிறைவேறுமென்னும் வாய்ப்பு குறுகிக் கொண்டே செல்லும். ஆனால் இவையனைத்தும் முன்னறிவித்தவாறு முன்னறிவித்தபடியே, அப்படியே நிறைவேறினால், அது 'ஊகம்' என்னும் சூழ்நிலைக்கு அப்பாற்பட்டது என்பது திண்ணம், அது தேவனாகத்தான் இருக்க முடியும். இது உங்களுக்கு விசித்திரமாகத் தென்படலாம். ஆனால் இக்காலத்திற்கென அளிக்கப்பட்டுள்ள வேதவாக்கியங்கள் வேதாகமத்தில் எங்குள்ளன என்பதை நாங்கள் அறியாமலிருந்தபோது, பரிசுத்த ஆவியானவர்தாமே அவைகளை எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்து, அவைகளை ஒரு ஓவிய வடிவத்தில் ஒன்று கோர்த்து, நாம் எந்த நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்பதை நமக்கு வெளிப்படுத்தி தந்திருக்கின்றார். யுகங்கள் மாறிக்கொண்டே வருகின்றன. 10நாம் ஒரு திருப்பத்தில் இருக்கிறோம். ஒரு கட்டிடம் கட்டப்படும்போது, யார் வேண்டுமானாலும் கற்களை நேர் வரிசையில் வைத்துக் கட்டுவது சுலபம். ஆனால் திரும்ப வேண்டிய முனைகள் (Corners) வரும்போது, ஒரு கொத்தன் மாத்திரமே அந்த பாகத்தைக் கட்ட முடியும். சில ஸ்தாபனங்கள் அவ்வாறே நேர்வரிசையில் கட்டிக் கொண்டே போகலாம். ஆனால் முனைகளை அடைந்து வேறு திசையில் கட்ட நேரிடும் போது, அதற்கு வேறொரு ஆள் தேவைப்படும். தேவன் சுவர்களை மாத்திரம் கட்டவில்லை. அவர் ஒரு வீட்டைக் கட்டி வருகிறார். ஒரு வீட்டில் அநேக முனைகளும் திருப்பங்களும் உண்டு. இவைகளைக் குறித்து அவர் வேதாகமத்தில் முன்னறிவித்துள்ளார். அந்த திருப்பங்களைக் கட்டுவது மிகக் கடினம். யார் வேண்டுமானாலும் அவைகளைக் கட்டுவதற்கு முயற்சி செய்யலாம். ஆனால் அவை வரைபடத்தில் காண்பித்தவாறு அமைந்திருக்க வேண்டும். இல்லையேல், அவை இடிக்கப்பட வேண்டும். 11கர்த்தர் நல்லவர், அதற்காகவும், உங்கள் ஐக்கியத்திற்காகவும், வியாபாரிகளாகிய உங்கள் மூலம் சத்தியத்தை அறிவிக்கக் கர்த்தர் திறந்த வாசல்களை அளித்துள்ளமைக்காகவும், நாம் தேவனைத் துதிக்கக் கடமைப்பட்டுள்ளோம். ஸ்தாபனங்களிலுள்ள மக்கள் பேரில் எனக்கு நம்பிக்கையுண்டு, ஆனால் ஸ்தாபனங்கள் தம்மைச் சுற்றி வேலியடைத்துக் கொண்டிருப்பதால், அங்கு சத்தியத்தை அறிவிக்கத் தருணம் கிடைப்பதில்லை. சற்று முன்பு சகோதரன் டேவிட் வாத்துகள் வளர்ப்பதைக் குறித்துப் பேசினாரே அதற்கு இதனை ஒப்பிடலாம். வாத்துகள் எல்லாம் ஒன்றோடொன்று ஐக்கியங்கொள்ள விரும்பின. ஆனால் அவை வெவ்வேறு கூடுகளில் அடைக்கப்பட்டிருந்தமையால், அவ்வாறு ஐக்கியங் கொள்ள முடியாமற் போனது. ஆனால் தண்ணீர் மட்டம் அதிகரித்த போது, அது வாத்துகளைக் கூடுகளினின்று வெளியே மிதக்கச் செய்தது. அதை தான் நாம் செய்ய வேண்டும். தண்ணீர் மட்டம் அதிகரிக்க நாம் அனுமதித்தால், நாமெல்லாரும் அவரவர் கூடுகளை விட்டு வெளிவந்து, கிறிஸ்துவின் உண்மையான அன்பை இருதயங்களில் கொண்டவர்களாய், ஒருவரோடொருவர் ஐக்கியங் கொள்ள ஏதுவாகும். 12முழு சுவிசேஷ வியாபாரிகள் எனக்கு பாலைவனச் சோலை போன்றவர்கள் (Oasis). அவர்கள் ஏற்படுத்தியுள்ள ஐக்கியத்தின் மூலம் சத்தியத்தை அறிவிக்க எனக்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கின்றனர். நான் சந்தித்துள்ள ஒவ்வொரு ஸ்தாபனத்திலும் எனக்கு அருமையான சகோதரர்கள் இருக்கின்றனர். பிரஸ்பிடேரியன்கள், மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பெந்தெகொஸ்தேயினர் (அவர்களிடையே காணப்படும் எல்லா ஸ்தாபனங்களும் உட்பட). தேவ சபையினர் (Church of God) நசரீன்கள் (Nazarenes), யாத்திரை பரிசுத்தர் (Pilgrim Holiness) அருமையான சகோதரர்கள். ஆனால் அவர்கள் சார்ந்துள்ள ஸ்தாபனங்களில் பிரசங்கம் செய்ய எனக்கு அனுமதி அளிக்க அவர்கள் அநேகமுறை முயன்றும், அவர்களால் இயலாமற் போயிற்று. அவர்கள் என் பேரில் விசுவாசம் கொள்ளவில்லை என்னும் காரணத்தால் அல்ல. ஆனால் ஸ்தாபனங்களைச் சேர்ந்துள்ளதால், அவர்கள் வேறு பிரிக்கப்பட்டுள்ளனர். எனவே எல்லாமே நின்று போகும் நிலையை அடைந்துவிடுகின்றது. சில நாட்களுக்கு முன்னர் ஒரு மெதோடிஸ்ட் சகோதரன் என்னை அணுகினார். அவர் பெயரை நான் குறிப்பிட விரும்பவில்லை. அவர் மிகவும் அருமையானவர். அவர் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து ஒரு வியாசம் (thesis) எழுதிக் கொண்டிருந்தார். சில ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள அவர் என்னை அணுகினார். நாங்கள் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் அவர் என்னிடம், ''சகோதரன் பிரான்ஹாமே, நீங்கள் எப்பொழுதும் பெந்தெகொஸ்தேயினரிடம் தொடர்பு கொண்டுள்ளதே நாங்கள் உம் பேரில் கொண்டுள்ள ஒரே ஒரு வருத்தம்'' என்றார். ''அப்படியானால் மெதோடிஸ்ட் சபை எனக்கு ஒரு கூட்டத்தை ஆயத்தம் செய்யட்டுமே'' என்று நான் பதிலளித்தேன். அதற்கு அவர், ''அது சரி, நான் மெதோடிஸ்ட் சபை அல்லவே. நான் அதிலுள்ள அங்கத்தினர்களில் ஒருவன் மாத்திரம்தானே“ என்று கூறினார். ''இதன் காரணமாகவே நான் பெந்தெகொஸ்தேயினரிடம் செல்கின்றேன். அவர்கள் தங்கள் வாசல்களை எனக்குத் திறந்து கொடுக்கின்றனர். யாரெல்லாம் என்னை உள்ளே வர அனுமதிக்கின்றனரோ, அங்கெல்லாம் நான் வர ஆயத்தமாயிருக்கிறேன்“ என்றேன். வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறப்பட்டுள்ளது போன்றது இது: ''இதோ வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்.'' வெளி. 3:20. அது இயேசு கிறிஸ்து என்பதை அறிவேன். ஏனெனில் அவர் வார்த்தையாயிருக்கிறார். 13ஆகவே, முழு சுவிசேஷ வியாபாரிகளின் ஐக்கியம் நாமெல்லோரும் ஒன்று கூடுவதற்கு ஒரு பாலைவனச் சோலையாக (Oasis) அமைந்துள்ளது. எந்த ஒரு ஸ்தாபனமும் இக்கூட்டங்களை ஒழுங்கு செய்யவில்லை. ஆனால் ஸ்தாபனங்களில் உள்ளவர் இங்கு ஒன்று கூடி ஐக்கியங் கொள்ள ஏதுவாயிருக்கிறது. உலகம் பூராவும் இத்தகைய அநேக முழு சுவிசேஷ வியாபாரிகள் ஐக்கியங்களை நிறுவனம் செய்ய நான் உதவி செய்திருக்கிறேன். இந்தத் தருணம் எனக்கு அளிக்கப்பட்டமைக்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஆங்காங்குள்ள வியாபாரிகள் இக்கூட்டங்களை ஒழுங்கு செய்தால், ஸ்தாபனங்களிலுள்ளவர் வந்து கலந்து கொள்ளலாம். நான் யாரையும் அவர்கள் சபையிலிருந்து வெளியே இழுத்துக்கொள்ள விரும்பவில்லை. உங்கள் சபையிலேயே நீங்கள் இருந்து கொண்டு, ஜீவனை அங்கிருந்து மற்றவர்க்கு எடுத்துரையுங்கள். உத்தம கிறிஸ்தவனாக வாழுங்கள். அப்பொழுது உங்கள் போதகர் உங்களைப் பாராட்டுவார். உண்மையான உத்தமமான பரிசுத்தவான்களாய் நீங்கள் வாழ்ந்தால், தேவன் பேரில் விசுவாசமுள்ளவர் அனைவரும் உங்களைப் பாராட்டுவார்கள். ஆம்! இந்தத் தருணம் எனக்கு அளிக்கப்பட்டமைக்காக இந்த ஐக்கியத்தைச் சார்ந்த அந்த சகோதரனுக்கும் அவர் மனைவிக்கும் நன்றி செலுத்துகின்றேன். இந்த ஐக்கியம் மென்மேலும் வளர்வதாக! தேவனுடைய ஆசீர்வாதம் இதன் பேரில் தங்கியிருப்பதாக! கர்த்தரின் வருகைக்கு முன்னர் நூற்றுக்கணக்கானவர் இரட்சிக்கப்பட, தேவனுடைய கரங்களில் இது கருவியாய் அமைந்திருப்பதாக! இங்கு மற்றைய ஐக்கியங்களின் பிரதிநிதிகளும் வந்துள்ளனர். அந்த ஐக்கியங்கள் அனைத்திற்கும் எனது நன்றி. 14சங்கீத புத்தகத்திலிருந்து உண்மையாகவே ஒரு விசித்திரமான பொருளைக் குறித்து இன்றிரவு சற்று நேரம் பேச விரும்புகின்றேன். வேறு ஒரு பொருளின் பேரில் பேச வேண்டுமெனக் கருதி, அதற்கான வேதவாக்கியங்களையும் குறித்துக் கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் நேரம் கடந்துவிட்டதால், நான் நீண்ட நேரம் பேச விரும்பவில்லை. ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதல் என்னும் பொருளின் பேரில் இன்றிரவு நான் பேச எத்தனித்துள்ளேன். எடுத்துக் கொள்ளப்படுதல் உண்டு என்று நாம் விசுவாசிக்கிறோம். வேதாகமத்தைப் படிக்கும் ஒவ்வொரு உண்மையான கிறிஸ்தவனும் “எடுத்துக் கொள்ளப்படுதல்” என்பது உண்டு என்பதை முற்றிலும் விசுவாசிக்கின்றான். 15அதற்கு முன்பு 27-ம் சங்கீதம் 1 முதல் 5 வசனங்கள் வாசிப்போம். ''கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க என்னை நெருக்குகையில் அவர்களே இடறி விழுந்தார்கள் எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன். கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும் படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில், தங்கியிருப்பதையே நாடுவேன். தீங்கு நாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்து வைத்து, என்னைக் கன்மலையின் மேல் உயர்த்துவார். சங்கீதம். 27:1-5 கர்த்தர் தாமே வாசிக்கப்பட்ட இவ்வசனங்களை ஆசீர்வதித்து தருவாராக! 16நான் பேசவிருக்கும் பொருளைக் குறித்து உங்களில் சிலருக்கு வித்தியாச பேதம் உண்டாக வகையுண்டு. உங்களில் எத்தனை பேர் சபை எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்து போதிக்கின்றது என்பதை விசுவாசிக்கின்றீர்களா? (ஆம் ஐயா அது சரி...?) சபையானது மேலே எடுத்துக் கொள்ளப்படும். நீங்கள் மெதோடிஸ்ட், பாப்டிஸ்ட், பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தே ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்களாயிருக்கலாம். நீங்கள் எதைச் சார்ந்தவர்களாயிருந்தாலும், எடுத்துக் கொள்ளப்படுதல் என்பது ஒன்று நிச்சயம் உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஜனங்களைப் பிரியப்படுத்த வேண்டுமெனக் கருதி நான் பிரசங்கம் செய்ய விரும்பவில்லை. இதுவரை அத்தகைய குற்றத்தை நான் செய்ததேயில்லை. பேச வேண்டுமென்று ஏவப்படுவதையே நான் பேச விரும்புகிறேன். நீங்கள் கிறிஸ்தவர்களாயிருந்தால், நான் பேசுவது நீங்கள் தேவனுடன் கொண்டிருக்கும் அனுபவத்தில் முன்னேற உங்களுக்கு உதவி புரிய வேண்டும். நீங்கள் கிறிஸ்தவர் அல்லாதவராயிருந்தால், நான் பேசும் வார்த்தைகள் உங்களை வெட்கமடையச் செய்து, கிறிஸ்தவர்களாக மாற்ற வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவன் நான். இதுவே எனது நோக்கம். எனவே கர்த்தர் என்னை வழிநடத்தும் விதத்தில் என் சிந்தனைகளை நான் செலுத்துகிறேன். 17கடைசி நாட்களில் இப்போதகம் பரிகாசத்திற்கு ஆளாகும் என்னும் எச்சரிக்கையை நாம் பெற்றிருக்கிறோம். அது சரியா இல்லையா என்று அறிய வேண்டுமானால் 2பேதுரு 3:3-4 வசனங்களைப் படியுங்கள். ''முதலாவது நீங்கள் அறிய வேண்டியது என்னவெனில், கடைசி நாட்களில் பரியாசக்காரர் வந்து தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்த பின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்ற முதல் இருந்த விதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள். பூர்வ காலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலை கொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும், அப்பொழுது இருந்த உலகம் ஜலப் பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். 18கர்த்தரின் வருகைக்கு ஏன் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்னும் காரணத்தை நீங்கள் இப்பொழுது அறிந்து கொள்ளலாம். கடைசி நாட்களில் பரியாசக்காரர் தோன்றி இவ்விதம் உரைப்பார்கள் என்று பேதுரு தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார். எனவே தான், ஜனங்கள் அத்தகைய மனப்பான்மையை இப்பொழுது கொண்டுள்ளனர். வேதம் இவ்விதம் கூறியுள்ளதால், அது நிறைவேறுமென்று நீங்கள் நிச்சயம் எதிர் பார்க்கலாம். மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புகாரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும் அவதூறு செய்கிறவர்களாயும் இச்சையடக்கமில்லாதவர்களாயும் கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும் துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. சத்தியத்துக்குப் போலியாயுள்ளதை நாம் இக்காலத்தில் தான் எதிர்பார்க்க வேண்டுமா? ஆம், நிச்சயமாக, 19இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்க மோசே கையில் ஒரு கோலை மாத்திரம் அடையாளமாக ஏந்திக் கொண்டு எகிப்துக்குச் சென்றான். பரலோகத்தின் தேவன் அவனுக்குத் துணையாயிருந்தார். அவன் ஒரு அற்புதத்தை அங்கு செய்தான். அதன் பின்னர் போலியாட்கள் எழும்பி அவன் செய்த அதே அற்புதத்தைச் செய்தனர். அவன் தான் முதலாவதாக அந்த அற்புதத்தைச் செய்தான். அவன் பின்னால் போலியாட்கள் இரண்டாவதாக எழும்பினர். முதன்முறையாக மோசே செய்த அந்த அற்புதத்தை அவர்கள் பாவனை செய்தனர். ''மோசேயின் நாட்களில் அல்லவா இது நிகழ்ந்தது!'' என்று நீங்கள் கூறலாம். ஆனால் கடைசி நாட்களில் இது மறுபடியும் நிகழும் என்று வேதவாக்கியம் உரைக்கின்றது. யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றது போல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள் விசுவாச விஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள்''. 11தீமோ. 3:8. ஜனங்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதற்கென்றே அநேக போலியான செயல்கள் தோன்றும். வெகுவிரைவில் நிகழவிருக்கும் 'எடுத்துக் கொள்ளப்படுதல்' என்பதைப் பொறுத்த வரையிலும் கூட, தேவனிடத்திலிருந்து தோன்றி அவருடைய வார்த்தையுடன் இணைந்துள்ள ஏதாவது ஒன்று எழும்பினால், அதைக் குழப்ப வேண்டுமென்பதற்கே ஏதாகிலும் வேறொன்று சம்பவிக்க வகையுண்டு. சாத்தான் அவ்விதம் செய்ய வேண்டுமெனும் நோக்கம் கொண்டவன். லாவேகாஸ் (Las Vegas) பட்டினத்திலிருந்து இங்கு வந்திருக்கும் சகோதரன், ''சாத்தான், உலகமே தன் ஆதிக்கத்தில் இருக்கின்றது என்றும், லாவேகாஸ் அவனுடைய தலைநகரம் என்றும் கூறுகின்றான்'', அதைப் போன்றது இது. சாத்தான் இப்பிரபஞ்சத்தின் தேவனாயிருக்கிறான். வானத்துக்குக் கீழ் காணப்படும் எல்லா இராஜ்யங்களின் பேரிலும் அவன் ஆதிக்கம் செலுத்துகிறான். ஆனால் ஒரு நாள் இயேசு அந்த ஆதிக்கத்தைப் பெற்றுக் கொள்வார். முன்னொரு நாளில் சாத்தான் அவருக்கு அதை அளிக்க முன் வந்தான். ஆனால் இயேசுவோ அதைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். ஏனெனில் இனி வரப்போகும் ஒரு நாளில் அவர் அதற்கு சுதந்திரவாளியாவார் என்பது அவருக்குத் தெரியும். 20''பரியாசக்காரர்“, இதைக் குறித்து நாம் சில நிமிடங்கள் தியானிப்போம். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு ஆங்கிலேயன் விடுத்த அறிக்கையை டூசோனில் ஒரு பத்திரிகையில் படித்தேன். அது கொட்டை எழுத்துக்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. பிலாத்துவுக்கும் இயேசுவுக்குமிடையே செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் விளைவாக, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் நடிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியென்றும், அவர் தம் புகழை நிலைநாட்ட இவ்வாறு நடித்தாரென்றும், அந்த ஆங்கிலேயன் கூறியதாக எழுதப்பட்டிருந்தது. அவர் கூறுவது உண்மையல்ல என்று நாம் நிரூபிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம். தேவனுடைய வார்த்தை அனைத்தையும் நாம் விசுவாசத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை நாம் விசுவாசிக்க வேண்டும். அந்த நடப்பு எங்ஙனம் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதை அந்த ஆங்கிலேயன் ஊகித்து, விவரமாக அந்த பத்திரிகையில் எழுதியிருந்தான். 21மகத்தான இங்கிலாந்து நாடு, ஜான் வெஸ்லி, சார்லஸ் வெஸ்லி, ஸ்பர்ஜியன் போன்ற வல்லமையுள்ள பிரசங்கிமார்களின் பிரசங்கங்களை முன் காலங்களில் கேட்டிருக்கிறது, அவர்கள் சந்தை வெளிகளிலும், மற்றைய ஸ்தலங்களிலும் பிரசங்கித்தனர். ஆனால் இங்கிலாந்து நாட்டவர் அக்காலத்தில் அளிக்கப்பட்ட செய்தியைப் புறக்கணித்தனர். இன்று அது அடைந்துள்ள நிலையைப் பாருங்கள். சகோ. வில்லியம்ஸ்ம் மற்றோரும் இன்றிரவு இதே நிலையையே அடைந்துள்ளனர். உலகிலுள்ள நாடுகள் அனைத்திலும் மிக மோசமான நிலையையடைந்துள்ள நாடு இங்கிலாந்து நாடாகும். நான் உலக முழுவதும் சென்றிருக்கிறேன். ஆனால் இங்கிலாந்தைப் போன்று மோசமான நிலையையடைந்துள்ள வேறெந்த நாட்டையும் நான் காணவில்லை. பில்லி கிரஹாமும் அதே கருத்து கொண்டவர். பூங்காவில் ஆண்களும் பெண்களும் பகிரங்கமாக ஆபாசமான செயல்களில் ஈடுபடுவதைக் கண்டதும், தம் மனைவியை அவர் அங்கிருந்து கூட்டிக் கொண்டு வெளிநடக்க நேர்ந்தது. இங்கிலாந்தில் நடக்கும் செயல்களைக் காணும்போது, நாம் மனமுடைந்து போகிறோம். இங்கிலாந்துக்கு ஓர் நல்ல தருணம் அளிக்கப்பட்டது. ஒரு காலத்தில் அது சீர்திருத்த இயக்கத்தை உலகம் முழுவதும் பரப்பினது. உச்ச நிலையை அடைந்த ஒரு நாடு எவ்வளவு தூரம் விழுந்து போகக் கூடும் என்பதற்கு இங்கிலாந்து ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இங்கிலாந்து நாட்டவர் முன் காலங்களில் அவர்களிடையே பரவின அதே செய்தியை இன்றைக்கும் கடைபிடித்து வரும் காரணத்தால் தான், இந்நிலையை எய்தியுள்ளனர். அக்காலத்து செய்தி இக்காலத்துக்குப் பொருந்தாது. அது எப்படி.... 22மோசே, ''ஒரு பேழையை உண்டாக்கி, நைல் நதியில் மிதக்க விடுவோம்“ என்று கூறி, நோவாவின் செய்தியை இஸ்ரவேல் ஜனங்களுக்கு அளித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? அது ஒருக்காலும் சரி வராது. அதேபோன்று, இயேசுவின் செய்தியும் மோசேயின் காலத்தில் பொருந்த முடியாது. வெஸ்லியின் செய்தி லூதரின் காலத்திலும், லூதரின் செய்தி வெஸ்லியின் காலத்திலும் பொருந்த முடியாது. நமக்குக் கடைசியாக கிடைக்கப் பெற்ற சீர்திருத்தம் பெந்தெகொஸ்தே இயக்கமாகும். ஆனால் இப்பொழுது நாம் அதனின்றும் அகன்று சென்று கொண்டிருக்கிறோம். பெந்தெகொஸ்தே இயக்கத்தின்போது அளிக்கப்பட்ட செய்தி, இப்பொழுது அளிக்கப்பட்ட செய்தியுடன் கலக்க முடியாது. ஏனெனில் அது வேறொரு காலத்திற்கு உரிய செய்தியாகும். அவையாவும் தேவனுடைய வார்த்தையே. ஆனால் ஒரு கட்டிடம் கட்டுவது போன்றது இது எடுத்துக் கொள்ளப்படுதலுக்கென்று மணவாட்டி உருவாக்கப்படுவதால், அவள் கால்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திலும், கைகள் வேறொரு காலத்திலும் உருவாகி இவ்வாறு அந்த உருவம் காலங்கள்தோறும் வளர்ந்து கொண்டே செல்கின்றது. நமக்கு முன்பிருந்த காலங்களில் வாழ்ந்து வந்தவர்களை அவமானமாக எண்ண வேண்டாம். அவரவர் காலத்தில் அளிக்கப்பட்ட செய்திக்கு அவர்கள் உண்மையாய் வாழ்ந்ததனால் அவர்களில் மணவாட்டிக்குள் இருந்த அனைவரும் உயிரோடெழுவார்கள். ஜீவன் (சத்து) கோதுமை தண்டின் வழியே கடந்து செல்வது போன்றது இது. அது நிலத்தில் புதைக்கப்பட்ட வித்தினின்று புறப்பட்டு வெவ்வேறு கட்டங்களை அடைந்து முடிவில் நிலத்தினுள் புதைக்கப்பட்ட கோதுமை மணியின் உருவத்தை அடைகின்றது. 23ஜெர்மானிய எழுத்தாளர் ஒருவர் எழுதிய ஒரு புத்தகத்தை நான் சமீபத்தில் படித்தேன். அவர், ''இவற்றில் காணப்படும் மூட வைராக்கியம் பொருந்தியவர் (Fanatics) அனைவரிலும் வில்லியம் பிரான்ஹாம் தலைசிறந்து விளங்குகிறார். அவர் ஒரு மந்திரவாதியேயல்லாமல் வேறொருவருமில்லை'' என்று அதில் எழுதியிருந்தார். அவர் ஒரு நாத்திகன். மேலும் அவர், ''இயேசுவைப் பின்பற்றின கிறிஸ்தவர்கள், தாய்மார்களும் குழந்தைகளும் உட்பட இருள் காலங்களில் சிங்கங்களுக்கு இரையானதைக் கண்ட போதிலும் தேவன் கைகட்டிக் கொண்டு ஒரு உதவியும் செய்யாமல் சும்மா இருந்துவிட்டாரே!'' என்று எழுதியுள்ளார். உலகப்பிரகாரமான கல்வியறிவு பெற்றவர் இதன் நோக்கத்தை விளங்கிக் கொள்ள முடியாது. 24முதலாவதாக கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாக வேண்டும். இயேசு கிறிஸ்து இவ்வாறு விழுந்து, பின்பு உயிரோடெழுந்தது போன்று ஆதி சபையும் இருள் காலங்களில் நிலத்தில் புதைக்கப்பட வேண்டிய அவசியம் நேர்ந்தது. எந்த ஒரு விதையும் வளர வேண்டுமானால், அதற்கு முன்பு அது நிலத்தடியில் சற்று இருள் காலத்தை அனுபவிக்க வேண்டும். மார்டின் லூதர் காலத்தில் அது முளைக்கத் தொடங்கி, வெஸ்லியின் காலத்திலும் பெந்தெகொஸ்தேவர் காலத்திலும் அது வளர்ந்து, முடிவில் கோதுமை மணியாக உருவாகின்றது. சுட்டெரிக்கப்படும் கோதுமை தண்டுதான் ஸ்தாபனங்களாகும். ஆனால் ஒவ்வொரு சீர்திருத்த காலத்தின் போதும் வெளி வந்த உண்மையான கோதுமை மணிகள் யாவும் மணவாட்டிக்குள் அமைந்திருந்து, எடுத்துக் கொள்ளப்படுதலில் பங்குகொள்ளும். அக்காலத்திலிருந்த வரும் இக்காலத்திலுள்ள நாமும் அனைவருமாக ஒன்று சேர்ந்து மணவாட்டியாவோம். 25சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்தில் நீண்ட மயிரை வளர்த்த வாலிபர் குழு ஒன்று தங்களை இயேசுவென்று அழைத்துக் கொண்டு, சிலுவையில் அறையப்படுவது போன்று பாவனை செய்தனர். என்னே ஒரு அசுத்தமான செயல்! “அது இங்கிலாந்தில் அல்லவா நேர்ந்தது!'' என்று நீங்கள் கூறலாம். ஆனால் கடந்த வாரத்தில் பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளிவந்தது. அமெரிக்காவில் வேத தத்துவத்தில் பாண்டித்தியம் பெற்ற ஒருவர், இயேசு சிலுவை மரணம் எய்தினார் என்பது பொய்யென்றும், அவர் மரித்தது போன்று பாசாங்கு செய்தாரென்றும் கூறியுள்ளார். அதாவது மரியுவானா (Marijuana) என்னும் உறக்கம் அளிக்கும் செடியைப் போன்றது தூதாயீம் செடி (Mandrake weed) என்னப்படும் ஒருவகை செடி அக்காலத்தில் கிழக்கத்திய நாடுகளில் காணப்பட்டது என்றும் (அதைக் குறித்து ஆதியாகமத்தில் எழுதப்பட்டுள்ளது) அதன் பானத்தைக் குடித்துவிட்டால், அது இரண்டு அல்லது மூன்று நாட்கள் உறக்கத்தில் ஆழ்த்திவிடுமென்றும், 26இயேசுவுக்குக் காடி கலந்த பானத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள் என்று எழுதப்பட்டுள்ளதே, அது உண்மையில் தூதாயீம் பானமாக இருக்கக்கூடும் என்றும் அவர் எழுதியுள்ளார். அதைக் குடித்துவிட்டு அவர் மயங்கி விழுந்தபோது, அவர் மரித்தவரைப் போல் காணப்பட்டாரென்றும், அப்பொழுது அவர் கல்லறையில் வைக்கப்பட்டு, இரண்டு மூன்று நாட்கள் கழித்து உறக்கம் தெளிந்து வெளிவந்தாரென்றும், பின்னர் அவர் இந்தியாவை அடைந்து அங்கு இயற்கை மரணம் எய்தினார் என்றும் அவர் எழுதியுள்ளார். ஜனங்களுக்கு என்ன சம்பவித்துள்ளது? பரியாசக்காரர் மத்தியில் நாம் வாழ்ந்து வருகிறோம். பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உரைக்கப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் நிறைவேற வேண்டுமென்பதற்காகவே இவை சம்பவிக்கின்றன. 27ஒவ்வொரு காலத்துக்கும் தேவன் தம் வார்த்தையினின்றும் ஒவ்வொரு பாகத்தை பங்கிட்டு அளித்துள்ளார். அந்தந்த பாகத்தை அந்தந்த காலங்களில் வாழ்ந்தவர் ஏற்றுக் கொண்டனர். அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய மக்களையும் அவர் அந்தந்த காலத்தில் முன்குறித்திருந்தார். மோசேயை அவர் அவனுடைய காலத்தில் தெரிந்து கொண்டது போன்று, ஒவ்வொரு காலத்துக்கென்றும் அவர் அளித்திருந்த செய்தியை மக்களுக்கு அறிவிக்க அவர் ஒவ்வொரு காலத்திலும் ஒரு மனிதனைத் தெரிந்துகொண்டார். தேவ குமாரனும் கூட அவர் வாழ்ந்த காலத்துக்கென்று இதற்காக நியமிக்கப்பட்டிருந்தார் என்று வேதம் உரைக்கின்றது. தேவன் முடிவில்லாதவர், சர்வ வல்லவர், சர்வ வல்லமையும் பொருந்தியவர், சர்வ வியாபி, எல்லாம் அறிந்த சர்வ ஞானமுள்ளவர். அவர் ஆதியிலிருந்து அந்தம் வரை எல்லாம் அறிந்திருப்பவர். அவருடைய வார்த்தையைப் பார்த்து, அவர் என்ன செய்கிறார் என்பதை நாம் காணும் போது, நம்மால் அதைப் புரிந்துகொள்ள முடிகின்றது. 28அந்த வேத பண்டிதர் இயேசு தூதாயீம் பானத்தை அருந்தினார் என்று கருதுகின்றாரே. இயேசு அவருக்கு அளிக்கப்பட்ட காடி கலந்த கசப்பு பானத்தைக் குடிக்காமல் உமிழ்ந்துவிட்டார் என்பதை நாம் முதலாவதாக அறியவேண்டும். இரண்டாவதாக, அவரைக் குறித்து பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசனம் அனைத்தும் அவர் வாழ்க்கையில் நிறைவேறினதா? அப்படி நிறைவேறியிருந்தால், அது எப்படி நிறைவேறினது? கர்த்தர் அதை நியமிக்காமலிருந்தால், அவை ஒருக்காலும் நிறைவேறியிருக்கவே முடியாது. மேலும் அவருடனிருந்த ஒவ்வொரு சீஷனும் இரத்த சாட்சியாக மரித்தான். பேதுரு அப்போஸ்தலன் சிலுவையில் அறையப்படும் போது, “என்னைத் தலைக்கீழாய் சிலுவையில் அறையுங்கள். ஏனெனில் இயேசு கிறிஸ்து மரித்த விதமாகவே நான் மரிக்கப் பாத்திரவானல்ல” என்றான். அந்திரேயாவை அவர்கள் பக்கவாட்டில் சிலுவையில் அறைந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் சாட்சிகளை தங்கள் சொந்த இரத்தத்தினால் முத்தரித்தனர். அவர்கள் இயேசுவை விசுவாசித்து, அவரில் அன்புகூர்ந்து அவருக்காகத் தங்கள் உயிரையே தியாகம் செய்தனர். அவர் ஒரு ஏமாற்றுக்காரனாக இருப்பாரானால், அவர்கள் இவையனைத்தையும் செய்திருப்பார்களா? ஆவிக்குரிய மன ஒருமைப்பாட்டை இங்கே பாருங்கள். ஆனால் மக்கள் இதைப் புரிந்து கொள்வதில்லை. 29சில நாட்களுக்கு முன்பு, யூத ரபீ ஒருவர் மோசே சிவந்த சமுத்திரத்தைக் கடந்து போன நிகழ்ச்சியைக் குறித்து எழுதியிருந்தார். உண்மையாக மோசே தண்ணீர் வழியாக நடந்து செல்லவில்லையென்றும், சிவந்த சமுத்திரத்தின் ஒரு முனையில் நாணல் புதர் மேல் நடந்து சென்றான் என்றும் அவர் எழுதியிருந்தார். அநேக போதகர்கள் அது உண்மையென்று நம்பினர்; ஏற்றுக் கொண்டனர். முதன் முறையாக ருஷிய விண்வெளி வீரன் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்தபோது, தேவனைக் குறித்த ஏதொன்றையும் அவன் அங்கு காணவில்லையென்று அறிவித்தான். அது போதகர்களையும் கூட அசைத்துவிட்டது. தேவன் ஆகாயத்தில் 150 மைல்கள் உயரத்தில் வாழ்கின்றதாக அவர்கள் எண்ணுகின்றனர் போலும் கல்வியறிவும், இவ்வுலக ஞானமும் ஒரு சபையை ஒரு நாணல் புதர்கட்டாக்கிவிட்டது. 30கல்வி, கல்வி முறைமை, விஞ்ஞானம், நாகரீகம் இவையனைத்தும் பிசாசினால் உண்டானவை. இந்த நாகரீகம் பிசாசினால் உண்டானது என்று வேதம் கூறுகின்றது. நாம் எதிர்நோக்கியிருக்கும் நாகரீகம் வேறுவிதமாக இருக்கும். அதற்கும் தற்பொழுது நாம் காணும் நாகரீகத்திற்கும் எவ்வித தொடர்புமிராது. விஞ்ஞானம் நிறைந்த இவ்வுலகில், விஞ்ஞானம் வளர வளர, நாம் அதிகமாக மனிதரைக் கொலை செய்ய உபாயம் தேடுகிறோம். ஆனால் வரப்போகும் அந்த புதிய கலாச்சாரத்தில் மரணம், வியாதி, துன்பம் வேதனை என்பவை இருக்கவே இருக்காது. இப்பொழுது நாம் காணும் இந்த நாகரீகம் பிசாசினால் தோன்றியபடியால் அது நிர்மூலமாகும். 31காயீன் சந்ததியார் நாகரீகத்தை ஆரம்பித்தனர் என்று ஆதியாகமம் 4:16-24 வசனங்கள் உரைக்கின்றன. அவர்கள் பட்டினங்களைக் கட்டினர். வாத்திய கருவிகள் உண்டாக்கினர். விஞ்ஞான மனப்பான்மையைக் கொண்டிருந்தனர். அவர்கள் தேவனைவிட்டு அகன்று சென்றனர். எனினும் தேவபக்தியுள்ளவர்களாகக் காணப்பட்டனர். ஆனால் சேத்தின் சந்ததியாரோ கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டனர். எல்லா ஸ்தாபனங்களும் உலக சபை ஆலோசனை சங்கத்தில் ஒன்றாக இணைகின்றன. வேதாகமம் இதைக் குறித்து முன்னறிவித்தது அப்படியே நிறைவேறிவிட்டது. உங்கள் ஸ்தாபனங்களைக் குற்றப்படுத்தி உங்கள் மனதைப் புண்படுத்த நான் விரும்பவில்லை. ஒவ்வொரு ஸ்தாபனத்திலும் நல்லவர் அனேகர் உள்ளனர். சென்ற வாரம் லூயிசியானாவிலுள்ள ஷிரீவ்போர்ட்டிற்கு (Shreveport) நான் சென்றிருந்தபோது, கத்தோலிக்க சபை இவ்விதம் ஒரு அறிக்கை விடுத்துள்ளதாக ஒரு பத்திரிகையில் படித்தேன் 32பிராஸ்டண்டுகள் இன்னமும் வேதபுத்தகத்தை விசுவாசிக்கின்றனர். வேதபுத்தகம் என்பது சபையின் வரலாற்றைக் கூறும் ஒரு புத்தகமாகும். அது 250 ஆண்டுகளுக்கு முன்னர் தான் இலக்கியமாகத் தொகுக்கப்பட்டது. எந்தக் காலத்திலும் சபையை முக்கியம் வாய்ந்ததேயன்றி, வேதபுத்தகம் அல்ல. சபையின் செயல்களை வரலாறாகச் சித்தரிப்பதுதான் வேத புத்தகம். எவ்வளவு ஒரு தந்திரமான பொய் பாருங்கள். வேதாகமம் 3000 ஆண்டுகளாக உள்ளது. கிறிஸ்து இவ்வுலகில் பிறப்பதற்கு முன்னரே, பழைய ஏற்பாடு எழுதப்பட்டு, நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வேதமாக இருந்து வந்தது. பிசாசின் தந்திரமான செயலைப் பாருங்கள். 33இக்காலத்தில் வேத புத்தகத்தை அநேகர் பரியாசம் செய்து, அதை நிராகரிக்கின்றனர். ஏதாவதொன்றை ஆதாரமாகக் கொண்டு கர்த்தர் சபையை நியாயந்தீர்க்க வேண்டும். இல்லையேல் அவர் நீதியுள்ளவரல்ல. 20 மைல் வேகத்தில் மாத்திரமே நான் வாகனத்தை ஓட்டிச் செல்லவேண்டும் என்று அரசாங்கத்தாரால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு தெருவில் நான் 30 மைல் வேகம் ஓட்டிச் சென்றதாக வைத்துக் கொள்வோம். 20 மைல் வேகம் தான் ஓட்டிச் செல்ல வேண்டுமென்ற நிர்ணயம் இருந்தால் மட்டுமே நான் குற்றவாளியாகக் கருதப்படுவேன். என்றாவது ஒரு நாளில் தேவன் சபையை - மக்களை - நியாயந்தீர்ப்பார் என்று நாமறிவோம். நியாயத்தீர்ப்பு வரப்போகின்றது. அவர் கத்தோலிக்க சபையைக் கொண்டு நியாயந்தீர்க்கப் போகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் எந்த கத்தோலிக்க சபை? அவர் நம்மை மெதோடிஸ்டு சபையைக் கொண்டு நியாயந்தீர்த்தால், பாப்டிஸ்டுகள் குற்றவாளிகளாவார்கள். அவ்வாறே ஒருத்துவம் கொள்கையினரைக் கொண்டு அவர் நியாயந்தீர்த்தால், இருவர் கொள்கையினர் (Twoness) குற்றவாளிகளாவார்கள். அப்படியானால் எதைக் கொண்டு அவர் நியாயந்தீர்க்கப் போகிறார்? அவர் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு நியாயந்தீர்க்கப் போவதாக வேதத்தில் உரைத்துள்ளார். கிறிஸ்து தான் வார்த்தை. எனவே தேவனுடைய வார்த்தையைக் கொண்டு நாம் நியாயந்தீர்க்கப்படுவோம். ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்து, அந்த வார்த்தை தேவனாயிருந்தது யோவான் 1:1 “அந்த வார்த்தை மாம்சமாகி... நமக்குள்ளே வாசம் பண்ணினார்'' யோவான் 1:14 இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார்'' எபி. 13:8 தேவன் தம்முடைய வார்த்தையைக் கொண்டு நியாயந் தீர்ப்பார். இந்நாட்களில் ஸ்தாபனங்கள் வேதத்தை அகற்றி சபையை அங்கீகரித்து சொந்த பிரமாணங்களை உண்டாக்கி, அதன்படி நடக்கின்றன. 34நற்கருணையைக் குறித்து அன்று ஓரிரவு நான் ஷீரிவ் போர்ட்டில் பேசினேன். பஸ்கா பண்டிகையின் போது அவர்கள் எவ்வாறு ஒரு ஆட்டுக்குட்டியைப் பலி செலுத்தினர் என்றும், அந்த ஏழு நாட்களும் புளிப்பு எதுவும் அவர்களிடையே இருக்கக் கூடாது என்றும் நான் பிரசங்கம் செய்தேன். இவ்வேழு நாட்களும் ஏழு சபையின் காலங்களைக் குறிக்கின்றன. இந்த ஏழு சபை காலங்களில் புளிப்பு எதுவும் காணப்படக் கூடாது. ஆனால் அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் தேவனுடைய வார்த்தையுடன், பிரமாணங்கள் என்னும் புளிப்பைச் சேர்த்துக் கொண்டு, ஸ்தாபனங்களை உண்டாக்கிக் கொண்டு, அதுவே தேவனுடைய வார்த்தையென்று சாதித்தனர். ஆனால் ஏழு நாட்கள் முழுவதும் புளிப்பு என்பது காணப்படவே கூடாது. 35இன்று நீங்கள் புசிக்காததை நாளைக்காக சேமித்து வைக்காதீர், காலை வருமுன் அதை சுட்டெரித்து விடுங்கள். ஏனெனில் வேறொரு புதிய செய்தி அப்பொழுது அளிக்கப்படும். ஆனால் சபையோ மற்றொரு நாளைக்கென்று சேமித்து வைக்கும் மனப்பான்மையைக் கொண்டுள்ளது. ஒரு எழுப்புதல் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்குள் அதனின்று ஒரு ஸ்தாபனம் தோன்றுகிறது என்று சபை வரலாறு நமக்குக் காண்பிக்கிறது. ஆனால் இந்த செய்தியோ 20 ஆண்டுகளாக உலகம் முழுவதும் பரம்பியும் அதனின்று ஸ்தாபனம் எதுவும் தோன்றவில்லை என்பதை கவனித்தீர்களா? ஸ்தாபனம் இதனின்று தோன்றவே தோன்றாது. ஏனெனில் இதுவே முடிவாகும். நிலத்தடியில் புதைக்கப்பட்ட கோதுமை மணி மறுபடியும் கோதுமை மணியைத் தோன்றச் செய்துவிட்டது. பதர் அகன்றுவிட்டது. ஏனெனில் கோதுமை மணி சூரிய வெளிச்சத்தில் முதிர்வடைய வேண்டும். 36சில நாட்களுக்கு முன்பு கிழக்குக் கடற்கரையில் மின்சாரம் கோளாறடைந்து இருள் சூழ்ந்தது. சென்ற வாரம் டெக்சாஸ் பகுதி இதே போன்று இருளடைந்தது. இதன் காரணத்தை அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை. இவையாவும் அடையாளங்கள் என்பதை நீங்கள் உணருவதில்லையா? எல்லா நாடுகளும் உடைகின்றன. இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் சொந்த நாட்டை அடைந்துவிட்டனர். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம் என்பதற்கு இவை அறிகுறிகள். அதே சமயத்தில் இங்கு இருள் சூழ்கின்றன. “சாயங்கால நேரத்தில் வெளிச்சம் உண்டாகும்'' என்று தீர்க்கதரிசி உரைத்துள்ளதும் ஒரு அறிகுறி என்பதை நீங்கள் அறிவீர்களா? ''ஒரு நாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது அது பகலுமல்ல இரவுமல்ல. ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும்'' 37அது எவ்விதமாக இருளடைந்தது என்பதைக் கவனியுங்கள். போப் அண்மையில் பாலஸ்தீனா நாட்டிற்குச் சென்றிருந்தார். அவர் பயணம் செய்யுமுன்பு, வெளிப்படுத்தின விசேஷம் 2, 3 அதிகாரங்களில் உரைக்கப்பட்டுள்ள சபைகள் அந்தந்த காலங்களில் எவ்வாறிருந்தன என்பதைக் கர்த்தர் ஒரு நாள் கூடாரத்தில் நடந்த ஆராதனை ஒன்றில் நமக்கு வெளிப்படுத்திக் கொடுத்தார். நான் அன்று கரும்பலகையில் ஏழு சபை காலங்களைக் குறித்து ஒரு வரைபடம் வரைந்தேன். அதை இந்தப் புத்தகத்தில் வெளியிட்டுள்ளேன்.(உரைக்கப்பட்ட வார்த்தை Vol 1. No.2). நான் கரும்பலகையில் வரைந்த அதே நேரத்தில் பரிசுத்த ஆவியானவர் அக்கினி ஸ்தம்பமாக இறங்கி வந்து, அக்கட்டிடத்தின் பின்பாகத்தில் அவரே இதை சுவரில் வரைந்து காண்பித்தார். ஏறக்குறைய 300 அல்லது 400 பேர் அதைப் பார்த்தனர். போப் பாலஸ்தீனாவுக்குப் பிரயாணம் செய்தபோது, சந்திரன் சூரியனை மறைத்து கிரகணத்தை உண்டாக்கியது. விஞ்ஞானிகள் கிரகணத்தைப் புகைப்படம் பிடித்தனர். ஏழு சபைகளின் காலத்தைச் சித்தரிக்க நான் கரும்பலகையில் வரைந்தவாறே அப்புகைப்படங்கள் தோற்றமளித்தன. போப் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு விஜயம் செய்தபோது பதின்மூன்றாம் தேதி வந்தார். அவர் பதின்மூன்று படிகள் ஏறி, பதின்மூன்று நபர்களுக்கு நற்கருணை வழங்கினார். அது பதின்மூன்று என்னும் எண் கொண்ட அமெரிக்காவில் நிகழ்ந்தது. அது மாத்திரமல்ல, எங்கும் இருள் மயமாகின்றது. அப்படியானால் நாம் எங்கு வந்திருக்கின்றோம்? நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். இக்காலத்தில் பரியாசக்காரர், ''நம்முடைய பிதாக்கள் நித்திரையடைந்த காலத்தில் இருந்ததைக் காட்டிலும் எவ்வித மாற்றமும் காணப்படவில்லையே“ என்கின்றனர். ஆனால் இவை யாவும் சம்பவிப்பதை நீங்கள் காணும் போது உங்கள் தலைகளை உயர்த்தி ஆயத்தமாகுங்கள். எந்த நேரத்தில் எது வேண்டுமானாலும் நிகழலாம். கிறிஸ்து தம் சபைக்காக வரப் போகின்றார். 38ஆனால் மக்களோ அதை நம்ப மறுக்கின்றனர். இவ்விதமாக செய்வதினாலும், பேசுவதினாலும் வேத வாக்கியங்கள் உரைத்துள்ளதை அவர்கள் உண்மையாகவே நிறைவேற்றுகின்றனர் என்பதை அவர்கள் உணராமலிருக்கின்றனர். பிரதான ஆசாரியனாகிய காய்பாவும், மற்ற ஆசாரியர்களும் இயேசுவைப் பரிகாசம் செய்து சிலுவையில் அறைந்தபோது, எந்த தேவனைக் குறித்து அவர்கள் தங்கள் ஆலயத்தில் 22-ம் சங்கீதமாகப் பாடி வந்தார்களோ, அதே தேவன் தான் அங்கு சிலுயிைலே மரணமடைந்துக் கொண்டிருக்கின்றார் என்பதை அவர்களால் கண்டுகொள்ள முடியவில்லை. இயேசுவும், “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கின்றது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே'' என்று ஜெபம் செய்தார் (லூக்கா. 23:34). அவர்கள் கண்கள் குருடாக்கப்படும் என்று வேதம் அறிவித்துள்ளது. 39அவ்வாறே, கடைசி காலத்தில் கத்தோலிக்க ஸ்தாபனமும் பிராடெஸ்டன்டு ஸ்தாபனங்களும் குருடாவார்கள் என்றும், இயேசு சபையின் வெளியே நின்று கொண்டு உள்ளே செல்ல முயல்வார் என்றும் வேதம் தீர்க்கதரிசனம் உரைத்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? “நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத் தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்'' வெளி. 3:17 ஸ்தாபனங்களே, நீங்கள் மறுபடியும் குருடான நிலையில் பிரவேசித்து, தேவனுடைய காரியங்களைக் காலடியில் மிதித்து போட்டு, அவை பொருட்டல்ல என்று எண்ணி, அவைகளைப் பரியாசம் செய்கின்றீர்கள். 40ஆனால் மணவாட்டிக்கோ, “எடுத்துக் கொள்ளப்படுதல்”, என்னும் நிகழ்ச்சி உறுதி என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அது நிகழவிருக்கும் நேரத்தை கிறிஸ்துவின் உண்மையான மணவாட்டி எதிர் நோக்கியிருக்கிறாள். அது ஒரு வெளிப்பாடு, ஏனெனில் வெளிப்பாடு என்பது விசுவாசமாகும். விசுவாசமின்றி வெளிப்பாடு கிடைக்கப் பெறாது. விசுவாசம் என்பதே ஒரு வெளிப்பாடாகும்; ஏனெனில் அது உங்களுக்கு வெளிப்படும் ஒரு காரியமாகும். ஆபிரகாமுக்கு ஒரு காரியம் வெளிப்பட்டது. அதற்கு முரணாயிருந்த அனைத்தையும் அவன் நிராகரித்தான். அதுதான் விசுவாசம் என்பதாகும். விசுவாசம் என்பது தேவனிடமிருந்து கிடைக்கப் பெறும் வெளிப்பாடாகும். சரீரம் - அதாவது சபை - முழுவதுமே வெளிப்பாட்டின் பேரில் தான் கட்டப்பட்டு வருகின்றது. 41சில வாரங்களுக்கு முன்பு ஒரு அருமையான பாப்டிஸ்டு ஊழியக்காரருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் என்னிடம், ''உங்களை நான் மனிதன் என்னும் முறையில் நேசிக்கிறேன். ஆனால் நீங்கள் குழப்பமுற்றிருக்கின்றீர்கள்'' என்றார். அப்பொழுது நான், “அப்படியானால் குழப்பம் நீங்க நீங்கள் எனக்காக ஜெபிக்க வேண்டும்'' என்று பதிலுரைத்தேன். அவர், “சகோதரன் பிரான்ஹாமே, கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ள வேத வசனங்களை நாம் சரிவர மொழிபெயர்க்காவிட்டால், இவையனைத்தையும் நாம் சரியானபடி இணைக்க முடியாது'' என்றார். அதற்கு நான், “ஆம் ஐயா, அதைக் குறித்து உங்களுக்கு என்னைக் காட்டிலும் அதிகமாகத் தெரியும். ஏன், கிறிஸ்துவின் மரணத்தின் 300 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற நிசாயா ஆலோசனை சங்கத்திலும் கூட, எந்த கிரேக்க புலவர் கூறும் அர்த்தம் சரியென்று தர்க்கம் செய்தனர். ஆனால் வெளிப்பாட்டின் மூலமே அதன் அர்த்தம் அறியப்பட வேண்டும்'' என்றேன். அவரோ, ''வெளிப்பாடு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது'' என்றார். ''அப்படியானால் இயேசுவை எப்படி ஏற்றுக் கொண்டீர்கள்?'' என்று அவரை நான் கேட்டேன். அவர், ''இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் நித்திய ஜீவனைப் பெறுவான் என்று வேதத்தில் எழுதியுள்ளதே“ என்று விடையளித்தார். நான், “அது சரி, ஆனால் பரிசுத்த ஆவி வெளிப்படுத்தினாலன்றி ஒருவனும் இயேசுவைக் கர்த்தர் என்று அழைக்கமுடியாது என்று எழுதியிருக்கிறதே. எனவே நாம் மறுபடியும் 'வெளிப்படுத்தல்' என்னும் பொருளுக்குத்தான் வருகிறோம் அல்லவா?'' என்றேன். ஆம், அது வெளிப்படுத்தலின் மூலமே அறியப்பட முடியும். 42காயீனுக்கும் ஆபேலுக்கும், படிப்பதற்கென்று அப்பொழுது வேதாகமம் கிடையாது. ஆனால் ஆபேல் காயீனைக் காட்டிலும் மேலான பலியைச் செலுத்தினான். அது ஆபேலுக்குரிய விசுவாசத்தின் மூலம் வெளிப்பட்டது. அவன் நீதிமான் என்று கர்த்தரே சாட்சி பகர்ந்தார். ''பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்த போது, தம்முடைய சீஷரை நோக்கி மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும் சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார். அப்பொழுது அவர், “நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்”, என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக, “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து”, என்றான். இயேசு அவனை நோக்கி, “யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன். நீ பேதுருவாய் இருக்கிறாய். இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற் கொள்வதில்லை”. மத் 16:13-18 “இந்தக் கல்லின் மேல்”, என்று இயேசு கூறினதைக் கவனிக்கவும்... அதாவது இயேசு யார் என்னும் ஆவிக்குரிய வெளிப்பாட்டின் பேரில் அவர் தேவனை வெளிப்படுத்தினவர். ''அதன்மேல் என் சபையைக் கட்டுவேன்'' தேவன் தம்மை உலகிற்கு வெளிப்படுத்த எண்ணி அவரை மாமிசமாக்கிக் கொண்டார். தேவன் கிறிஸ்துவுக்குள் வாசமாயிருந்து, தம்மை உலகத்துடன் ஒப்புரவாக்கி, அவர் யாரென்பதை மாமிசமாகிய சரீரத்தின் மூலம் வெளிப்படுத்தினார். பேதுரு, ''நீர் கிறிஸ்து“ ...அபிஷேகம் பெற்றவர்... - ”ஜீவனுள்ள தேவனுடைய குமாரன்'' என்றான். இயேசு அவனை நோக்கி, “மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். அவரே உனக்கு இதை வெளிப்படுத்தினார் என்றார். இந்தக் கல்லின் மேல்... அதாவது அந்தந்த காலத்துக்குரிய வார்த்தையின் வெளிப்பாட்டின் மேல்..., என் சபையைக் கட்டுவேன், பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை”. 43வெளிப்படுத்தின விசேஷம் வேத புத்தகத்தின் கடைசி புத்தகமாகும். அதன் அர்த்தம் வெளிப்படாதவாறு அது அவிசுவாசிகளுக்கு முத்தரிக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது; ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளைத் தேவன் அவன் மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புத்தகத்தின் வசனங்களிலிருந்து எடுத்துப் போட்டால், ஜீவ புத்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும் அவனுடைய பங்கை தேவன் எடுத்துப் போடுவார்.'' வெளி. 22:18,19 வெளிப்படுத்தின விசேஷத்தில் அடங்கியுள்ள இரகசியத்தை அறிந்து கொள்ளும் சிலாக்கியம் விசுவாசிகளுக்கு மாத்திரமே அளிக்கப்பட்டுள்ளது. அது வெளிப்படுத்தின விசேஷம் புத்தகத்தைத் திறந்து, புத்தகம் முழுவதற்கும் ஆசிரியர் யார் என்பதை காண்பிக்கிறது. ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் முடிய, அவரையே நாம் அல்பாவாகவும் ஒமெகாவாகவும் கருத வேண்டும். இவை அனைத்திலும் இயேசு கிறிஸ்து மாறாதவராக இருந்து, தம்மைக் குறித்த பரம இரகசியத்தையும், சபை காலங்களுக்கென்று அவர் வைத்துள்ள திட்டங்களையும் வெளிப்படுத்தி வருகின்றார். அதை அவர் ஏழு முத்திரைகளுக்குள்ளே முத்தரித்திருக்கிறார். 44எழுதப்பட்ட புத்தகம் ஏழு முத்திரைகளால் முத்தரிக்கப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கட்டும். இந்த ஏழு முத்திரைகளும் கடைசி தூதன் பூமியில் தோன்றி முழக்கமிடும் வரை திறக்கப்படுவதில்லை. “...தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிற போது தேவ ரகசியம் நிறைவேறும்.'' வெளி. 10:6 இது நிறைவேறும் காலத்தில்தான் - லவோதிக்கேயா சபையின் காலத்தில் - நாம் வாழ்ந்து வருகிறோம். இக்கடைசி காலத்தில், அந்தப் புத்தகத்தின் இரகசியங்களை மூடி வைத்துள்ள ஏழு முத்திரைகளும் திறக்கப்பட்டு, அவை ஜனங்களுக்கு அறிவிக்கப்பட வேண்டும். அவர் அங்ஙனம் வாக்களித்துள்ளார். அறிவிக்கப்படும் இரகசியம் தேவனுடைய வார்த்தைக்கு அப்பாற்பட்டதாயிராது. ஏனெனில் வார்த்தையுடன் நாம் எதையும் கூட்டவும் குறைக்கவும் கூடாது. அது எப்பொழுதும் தேவனுடைய வார்த்தையாகவே அமைந்திருக்க வேண்டும். அதில் அடங்கியுள்ள சத்தியம் என்ன என்பதை இது வெளிப்படுத்தி, மற்றைய வேத வாக்கியங்களுடன் இணையச் செய்யும். அப்பொழுது தேவன் அது உண்மையென்று நிரூபிப்பார். 45தேவனுக்கு ஒரு வியாக்கியானி அவசியமில்லை. அவரே அவர் வியாக்கியானி. அவர் உரைத்துள்ள வார்த்தைகளை நிறைவேறச் செய்வதன் மூலம் அவரே அவருக்கு வியாக்கியானியாக இருக்கிறார். ஆதியிலே அவர், ''வெளிச்சம் உண்டாகக் கடவது என்று கட்டளையிட்டார். அப்பொழுது வெளிச்சம் தோன்றினது. அதற்கு எவ்வித வியாக்கியானமும் அவசியமில்லை. அவர் கூறியது அவ்வாறே நிறைவேறியது. இந்தக் கடைசி நாட்களில் சில சம்பவங்கள் நிகழுமென்று அவர் வேதத்தில் வாக்களித்துள்ளார். இயேசு தேவனுடைய குமாரன் என்பதை இவ்வாறே நிரூபித்தார். அவரை அனுப்பப் போவதாக தேவன் வாக்களித்திருந்தார். அவர் வந்த போதோ ஜனங்கள் அவரை விசுவாசிக்கவில்லை. ''வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே“ என்றும், ''என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்க வேண்டியதில்லை. செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள்'' என்றும் இயேசு கூறியுள்ளார். 46லூத்தரின் காலமாகிய சீர்திருத்தக் காலத்தில், அவர் செய்த கிரியைகள் அவர் யாரென்று சாட்சி பகர்ந்தன. அவ்வாறே பரிசுத்தமாகுதலின் காலமாகிய வெஸ்லியின் காலத்தில் அவர் செய்த கிரியைகள் அவர் யாரென்று சாட்சி பகர்ந்தன. பெந்தெகொஸ்தே காலத்திலும், வரங்கள் புதுப்பிக்கப்படுதல், அன்னிய பாஷை பேசுதல், பிசாசுகளைத் துரத்துதல் போன்ற கிரியைகள் அவர் யாரென்று சாட்சி பகர்ந்தன. அதைக் குறித்து யாதொரு பரிகாசமும், பேச்சுமில்லை. பெந்தெகொஸ்தே வரலாற்றை வர்ணிக்கும் புத்தகம் ஒன்றை நான் படித்தேன். அந்த இயக்கம் தொடங்கின போது, ''அது அதிக நாட்கள் நீடிக்காது; அது சாம்பலாய் போய்விடும்'' என்றனர். ஆனால் அது இன்னமும் எரிந்து கொண்டிருக்கிறது. ஏன்? அது எரிந்து கொண்டிருக்குமென்று தேவன் கூறியுள்ளார். அதை நீங்கள் ஒருக்காலும் அணைக்க முடியாது. அதைக் குறித்து தேவனுடைய வார்த்தையில் காணப்படும் அப்பாகம் நிறைவேறுதலாகும் அது. எவ்வாறு லூத்தர், வெஸ்லி போன்றவர்களின் செய்திகளை அவர் வாழ்ந்த காலங்களில் அணைக்க முடியவில்லையோ, அவ்வாறே பெந்தெகொஸ்தேயின் தீயையும் உங்களால் அணைக்க முடியாது. அப்படியானால், மணவாட்டியை வெளியே வரும்படி அழைக்கும் செய்தியையும் உங்களால் அணைக்க முடியும் என்று நினைக்கின்றீர்களா? தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டு, அது உண்மையென்று வெளிப்படுத்தலாகும் அது. அந்த நாட்களில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது அவரைக் குறித்த இரகசியம் வெளிப்பட்டுக் கொண்டு வருவதற்காக கர்த்தருக்கு துதியுண்டாவதாக! 47நாம் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கும் “எடுத்துக் கொள்ளப்படுதல்” என்பது மணவாட்டிக்கு மாத்திரமே உரியதாகும். “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரவருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை'' என்று வேதம் உரைக்கின்றது. ”எடுத்துக் கொள்ளப்படுதல்“, என்பது இல்லையானால், நம் நிலை என்ன? நாம் என்ன செய்யப் போகிறோம்? நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் என்ன? நமக்கு அளிக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தம் யாது? 'எடுத்துக் கொள்ளப்படுதல்' என்பது நிச்சயம் உண்டு என்று வேதாகமம் கூறுகின்றது. அது தெரிந்து கொள்ளப்பட்ட மணவாட்டிக்கு மாத்திரமே உரியது; சபையாகிய, வெளியே இழுக்கப்பட்ட மணவாட்டிக்கு மாத்திரமே. 'சபை' என்னப்படுவது வெளியே அழைக்கப்படுதல் என்னும் பொருள் கொண்டதாகும். மோசே ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை ஒரு குறிப்பிட்ட நாட்டினின்று வெளியே வரவழைத்தது போன்று பரிசுத்த ஆவியானவரும் மணவாட்டி என்பவளைச் சபையினின்று வெளியே வர அழைக்கிறார். ஸ்தாபனங்களிலுள்ள அங்கத்தினர்கள் அவ்வாறு தெரிந்தெடுக்கப்பட்டு ஒருங்கே மணவாட்டி மரமாகின்றனர். அவ்வாறு வெளியே அழைக்கப்பட்ட மணவாட்டி மாத்திரமே எடுத்துக் கொள்ளப்படுதலில் பங்கு பெறுவாள். அவள் தேவனால் ஆதியிலே முன்னறிந்து முன்குறிக்கப்பட்ட பிதாவின் ஆவிக்குரிய அணுவாக இருக்கிறாள். இங்கே ஒரு நிமிடத்திற்க்கு சற்று நான் நிறுத்தட்டும், ஒருவேளை… நான் உங்களை நீண்ட நேரத்திற்கு வைத்துவிடுவேனோ என்று நான் தொடர்ந்து நடுக்கமடைகிறேன். 48நீங்கள் இவ்வுலகில் பிறப்பதற்கு அநேக ஆண்டுகள் முன்னரே உங்கள் தகப்பன்மார்களுக்குள் ஒரு அணுவாக (gene) இருந்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் தகப்பனுக்குள் ஒரு கிருமி - ஒரு வித்து இருந்தது. ஜீவனை அளிக்கும் கிருமி மனிதனிடமிருந்து புறப்பட்டு வருகின்றது - பெண்ணிடத்திலிருந்தல்ல. பெண் முட்டையை அளிக்கிறாள். கிருமி வளர்வதற்கு பெண்ணின் உட்புறம் ஒரு ஸ்தலமாக அமைந்துள்ளது. ஆனால் உயிரை அளிக்கும் கிருமி தகப்பனிடத்திலிருந்து மாத்திரமே புறப்பட்டு வருகின்றது. எனக்கு 16 வயது ஆனபோதே, இப்பொழுது இங்கு அமர்ந்திருக்கும் என் மகன் எனக்குள் இருந்தான். அப்பொழுது நான் அவனை அறியவில்லை. எனினும், அவன் எனக்குள் இருந்தான். பரிசுத்த விவாகத்தின் மூலம் அவன் தன் தாயினுள் இருந்த ஸ்தலத்தில் வளர்ந்து என் சாயலைப் பெற்றவனாக வெளிவந்தான். இப்பொழுது நான் அவனை அறிந்திருக்கிறேன். அவனுடன் எனக்கு இப்பொழுது தொடர்பு கொள்ள முடியும். அவன் நியமிக்கப்பட்ட நேரத்தில் வெளியே வந்தான். 49உங்களுக்கு நித்திய ஜீவன் இருக்குமானால், உலகம் உண்டாவதற்கு முன்னரே நீங்கள் தேவனுக்குள் இருந்தீர்கள். நீங்கள் அவர் புத்திரனாக, அவருடைய ஒரு பாகமாக, தேவனின் தன்மையாக இருந்து வந்தீர்கள். நீங்கள் எந்த காலத்தில் உலகில் தோன்ற வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார், அந்த காலத்தில் தான் நீங்கள் வெளிவர வேண்டுமென்றும், நீங்கள் எந்த ஸ்தானத்தை வகிக்க வேண்டுமென்றும் அவர் முன் குறித்தார். அவர் உங்களுக்கென்று நியமித்துள்ள ஸ்தானத்தை வேறு யாரும் அபகரிக்க முடியாது. எத்தனை போலியாட்கள் எழும்பினாலும் எனக்குக் கவலையில்லை. உங்களுக்கென்று நியமிக்கப்பட்ட ஸ்தானத்தை நீங்கள் வகித்தே ஆகவேண்டும். ஏனெனில் நீங்கள் அதை வகிப்பீர்கள் என்று அவர் முன்கூட்டியே அறிவார். இப்பொழுது நீங்கள் ஒரு உருவமாக வெளிப்பட்டுவிட்டதால் அவருடன் உங்களால் ஐக்கியங்கொள்ள முடியும். அதைதான் தேவனும் விரும்புகின்றார். நீங்கள் அவரிடம் ஐக்கியங்கொள்ள வேண்டுமென்றும், அவரை வழிபட வேண்டுமென்றும் அவர் ஆவல் கொண்டவராயிருக்கிறார். ஆனால் உங்கள் ஜீவன் தேவனுடைய தன்மையாக இராமற்போனால், நீங்கள் ஒரு கிறிஸ்தவனைப் போல் மாத்திரமே நடிக்கின்றீர்கள் என்று அர்த்தமாகின்றது. அவ்விதம் நடிப்பவர் இலட்சக்கணக்கானோர். 50நான் ஒரு சமயம் டிமாஸ் ஷெகரியான் என்பவருடன் செயற்கை முறையில் கால்நடை உற்பத்தி செய்வதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். காளையினின்று வெளிவரும் ஸ்கலிதத்தில் இலட்சக் கணக்கான கிருமிகள் உள்ளன. ஆனால் அவைகளில் ஒன்று மாத்திரமே ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? அவ்வாறே ஒரு முட்டை மாத்திரம் வளமுள்ளதாக இருக்கிறது. ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்ட அந்த கிருமி, இலட்சக்கணக்கான கிருமிகளின் மத்தியில் மெள்ள நகர்ந்து, வளமுள்ள முட்டையைக் கண்டுபிடித்து அதற்குள் நுழைகின்றது. மற்ற கிருமிகள் அனைத்தும் மாண்டு போகின்றன. இயேசுவின் கன்னிப் பிறப்பைக் குறித்து நாம் தர்க்கம் செய்கிறோமே. உடலுறவினால் உண்டாகும் பிறப்பு அதனிலும் வியப்புள்ளதாய் அமைந்துள்ளது. தேவன், எவ்விதம் அதை முன்குறிக்கிறார் என்பது. இன்றிரவு இங்கு குழுமியுள்ள மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும், அநேக ஆண்டுகள் முன்பு, காலம் என்னும் ஒன்று உண்டாவதற்கு முன்னரே, உங்கள் பிதாவாகிய தேவனுக்குள் இருந்தீர்கள். ஆகையால் தான் நீங்கள் இவ்வுலகில் தோன்றினபோது, நீங்கள் கண்ட அனைத்தும் தவறு என்னும் உணர்ச்சி உங்களுக்கு உண்டாயிருந்தது. அவைகள் ஏன் இவ்விதம் இருக்க வேண்டுமென்று நீங்கள் வியந்தீர்கள். ஆனால் ஒரு நாள் ஏதோ ஒன்று உங்கள் உள்ளத்தைத் தொட்டது. அது என்ன? அது தான் தொடக்கத்திலேயே இருந்த ஜீவனாகும். 51கழுகுக் குஞ்சு ஒன்றை தாய்க் கழுகு தேடிச் சென்ற கதை ஒன்றுண்டு. இந்தக் கதையை நான் முன்னமே கூறக் கேட்டிருக்கின்றீர்கள். ஒரு கழுகுக் குஞ்சு பெட்டைக் கோழியின் அவையத்தில் விரிந்து வெளிவந்தது. பெட்டைக் கோழியின் பழக்க வழக்கங்கள் கழுகுக் குஞ்சுக்கு விசித்திரமாக இருந்தன. அதனால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை. கோழி நிலத்தைத் தன் கால்களால் சுரண்டி, ஆகாரம் பொறுக்கி குஞ்சுகளுக்கு அளிக்கும். ஆனால் கழுகுக் குஞ்சுக்கோ அந்த ஆகாரத்தைத் தின்ன முடியவில்லை. ஏனெனில் ஆரம்பத்திலேயே அது கோழிக் குஞ்சாய் இருக்கவில்லை. ஆயினும் அது கோழிக் குஞ்சுகள் அடைக்கப்பட்ட கூண்டில் தான் தங்கியிருந்தது. தாய்க் கோழி சத்தமிட்டால், கோழிக் குஞ்சுகள் அதன் பின் செல்லும். கழுகுக் குஞ்சும் அதைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது. ஒரு நாள் தாய்க் கழுகுக்கு அது இரண்டு முட்டைகள் இட்டதாக நினைவு வந்தது. அவைகளில் ஒன்று காணவில்லை. அது எங்காவது இருக்க வேண்டுமென்று அதற்குத் தெரியும். தாய்க் கழுகு அதைத் தேடிச் சென்றது. அது சுற்றி சுற்றி பறந்து வந்து கோழியும் அதன் குஞ்சுகளும் உள்ள ஸ்தலத்தையடைந்த போது, அதன் குஞ்சு, கோழிக் குஞ்சுகளின் மத்தியில் இருப்பதைக் கண்டு பிடித்தது. தாய்க் கழுகு கீச்சென்று சத்தமிட்டபோது, அதுவே அதற்குரிய சத்தம் என்பதைக் கழுகுக் குஞ்சு உணர்ந்துக் கொண்டது. இந்த சத்தத்திற்காகவே கழுகுக் குஞ்சு ஆவலுடன் எதிர் நோக்கியிருந்தது. அதைக் கேட்டவுடன் அது கோழி அல்லவென்றும் அது கழுகு என்னும் உணர்வு அதற்கு வந்தது. மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர் ஒவ்வொருவரும் இது போன்றே உள்ளனர். நீங்கள் எத்தனை ஸ்தாபனங்களைச் சேர்ந்திருந்தாலும், எத்தனை முறை உங்கள் பெயர்கள் ஸ்தாபனப் புத்தகங்களில் எழுதப்பட்டிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவனுடைய வார்த்தை உங்கள் முன்னிலையில் சத்தியமென்று நிரூபிக்கப்படும் போது, நீங்கள் கழுகு என்னும் உணர்வு பெறுகின்றீர்கள். கோழி எவ்வளவுதான், ''நீங்கள் இதை சேருங்கள், அதை சேருங்கள் இந்த வழி செல்லுங்கள், அந்த வழி செல்லுங்கள்“ என்று சப்தமிட்டாலும், அது அர்த்தமற்றது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். ஏனெனில் உண்மையான வார்த்தையுடன் வார்த்தை சேர்க்கப்பட வேண்டும். 52ஜீவனுள்ள கிருமி பெண்ணின் கர்ப்பப்பையை அடையும் போது, அது வித்தியாசப்பட்ட உருவங்களை அடைவதில்லை. நீங்கள் உங்கள் தகப்பனிடமிருந்து ஒரு மனித அணுவாகத் (human cell) தொடங்கினீர்கள். இந்த மனித அணுவுடன் நாயின் அணு ஒன்றும், பூனையின் அணு ஒன்றும், கோழியின் அணு ஒன்றும் சேர்க்கப்பட்டு, நீங்கள் உருவாகவில்லை. மனித அணுக்கள் ஒன்றோடொன்று சேர்க்கப்பட்டதன் விளைவாக நீங்கள் தோன்றினீர்கள். மணவாட்டியும் அவ்விதமே உருவாக வேண்டும். அவள் இயேசு கிறிஸ்துவின் சரீரத்தின் பாகமாக இருப்பாள். இயேசு கிறிஸ்துவே வார்த்தை. ஆகவே மணவாட்டியும் வார்த்தையாக இருத்தல் அவசியம். வார்த்தை ஒன்றுடன் ஒன்றாக சேர்க்கப்பட வேண்டும். அது லூத்தரின் நீதிமானாக்கப்படுதல், வெஸ்லியின் பரிசுத்தமாக்கப்படுதல், பெந்தெகொஸ்தேவின் பரிசுத்த ஆவியின் அபிஷேகம், வரங்கள் புதுப்பிக்கப்படுதல் இவையனைத்தும் ஒருங்கே சேர்க்கப்பட்டதாயிருக்கும். ஒரு வார்த்தையின் மேல் மற்றொரு வார்த்தை வைக்கப்பட்டு இணைக்கப்பட வேண்டும். ஒரு கிருமியின் மேல் மற்றொரு கிருமி, ஒரு ஜீவனின் மேல் மற்றொரு ஜீவன் இவ்விதம் வைக்கப்பட்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மணவாட்டியினுடைய முழு உருவத்தை கொண்டு வரும். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் ஒரு தன்மையாயிருக்கிறீர்கள். 53கிறிஸ்து தம் மணவாட்டிக்காக வரப் போகின்றார் என்பதை நாம் அறிந்து கொண்டோம். அப்படியானால், நாம் எவ்வாறு இந்த மணவாட்டிக்குள் சேர்ந்து கொள்ள முடியும்? ஒருவர், “எங்கள் சபையோருடன் சேர்ந்து கொண்டால் நீங்கள் அதற்குள் வரமுடியும்” என்கின்றார். வேறொருவர், ''நீங்கள் இந்த பிரத்தியேக முறையில் ஞானஸ்நானம் பெற வேண்டும்'' என்றும், வேறொரு நபர், ''நீங்கள் அன்னிய பாஷையில் பேச வேண்டும்'' என்றும், மற்றுமொருவர் ''நீங்கள் அன்னிய பாஷையில் பேச வேண்டியதில்லை, நீங்கள் ஆவியில் நடனமாட வேண்டும் மற்றொருவர் “நீங்கள் சத்தமிட்டால் போதும்” என்றும், மற்றொருவர் “நீங்கள் உணர்ச்சிவசப்பட்டால் போதும்” என்றெல்லாம் வேறுபட்ட கருத்துக்களை உடையவராயிருக்கின்றனர். ஒரு வகையில் அவர்கள் கூறுவது சரியென்று தென்பட்டாலும் அவர்களெல்லாம் தவறு. தேவனே அவருடைய வார்த்தைக்கு வியாக்கியானம் அளித்து இதை நான் வாக்குத்தத்தம் செய்துள்ளேன், அது இப்பொழுது நிறைவேறி வருகின்றது'' என்று வெளிப்படையாய் கூறியிருக்க, தேவனால் பிறந்த யாராவது ஒருவன் அதை மறுதலிக்கக் கூடுமா? கிறிஸ்து எப்படி தம் சொந்த வார்த்தையை மறுக்கக் கூடும்? கிறிஸ்து உங்களுக்குள் வாசமாயிருந்தால், நீங்கள் அவருடைய வார்த்தையை ஒருக்காலும் மறுக்கவே முடியாது. 54அப்படியானால் நீங்கள் அவருடைய சரீரத்தில் எப்படி சேர்ந்து கொள்ள முடியும்? ''நாம் யூதராயினும் கிரேக்கராயினும் அடிமைகளாயினும், எல்லாரும் ஒரே ஆவியினால் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்'' கொரி. 12:13 ஆகவே, ஒரே பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் மூலமே அது சாத்தியமாகும். ஒரே ஆவியினால் நாம் எல்லாரும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். அந்த ஆவி கிறிஸ்துவின் ஜீவனாகும். விதையில் காணப்படும் ஜீவன், வார்த்தையெனும் விதை அந்த விதையை வளரச் செய்கின்றது. உங்களுக்குப் புரிகின்றதா? அந்த விதையில் ஜீவன் புதைந்து இருக்குமானால், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அதன் மேல் விழும் போது, அது விதையை உயிர் பெறச் செய்கின்றது. 55அரிசோனாவிலுள்ள பீனிக்ஸ் பட்டினத்தில் சகோதரன் ஜான் ஷாரியாட் எலுமிச்சை வகையைச் சேர்ந்த செடிகளை வளர்ப்பதைக் குறித்து நான் ஏற்கனவே உங்களிடம் கூறியுள்ளேன். ஒரே செடியில் எட்டு அல்லது ஒன்பது வகை பழங்கள் உண்டாயிருப்பதை அவர் எனக்கு காண்பித்தார். ''சகோதரனே, இது எத்தகைய செடி?“ என்று நான் அவரைக் கேட்டேன். அவர், ''இது ஒரு ஆரஞ்சு செடி'' என்று பதிலளித்தார். ''அப்படியானால் எலுமிச்சை வகையைச் சேர்ந்த அனேக பழங்கள் எப்படி இதில் தோன்றின?'' என்று நான் கேட்டேன். அதற்கு அவர், ''எலுமிச்சை வகை பழங்கள் ஈனும் கிளைகள் இதனுடன் ஒட்டுப் போடப்பட்டுள்ளன'' என்றார். “அடுத்த ஆண்டு இந்த செடி ஆரஞ்சு பழங்களை மாத்திரமா கொடுக்கும்?'' என்று நான் வினவினேன். அவர், “இல்லை, அந்தந்த கிளைகள் அதனதன் பழங்களை ஈனும்'' என்று விடையளித்தார். 56அது அதனதன் கனிகளையே ஈனும் என்பதை பழப் பண்ணை வைத்துள்ளோர் அனைவரும் அறிவர். ஒரு எலுமிச்சை கிளையை ஒரு ஆரஞ்சு செடியுடன் ஒட்டுப் போட்டால், அது எலுமிச்சம் பழங்களைத் தான் கொடுக்கும். ஏனெனில் அந்த தன்மையே அதற்குள்ளது. அது மூல மரமாகிய ஆரஞ்சு மரத்தின் பழங்களைத் தராது. இதையே தான் நாமும் செய்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் நாம் ஸ்தாபன பிரமாணங்கள் போன்றவைகளையே ஒட்டுப் போட்டுவிட்டோம். அப்படியானால் ஒரு மெதோடிஸ்டு ஸ்தாபனம் மெத்தோடிஸ்ட் ஸ்தாபனக் குழந்தைகளைத் தான் தோன்றச் செய்யுமேயன்றி வேறெதை நாம் எதிர்பார்க்க முடியும்? ஆனால் அந்த மரத்தில் வேறொரு கிளை வளர்ந்தால், அது ஆரஞ்சு பழங்களைத் தரும். அது போன்று, தேவன் சபையில் ஏதாவது செய்வாரானால் அது ஆதியில் அவர் செய்தது போன்றே இருக்கும். மறுபடியுமாக அது வார்த்தையாக இருக்கும். ஏனெனில் செடியிலுள்ள ஜீவன் (சத்து அதற்கே உரிய வகையைத்) தோன்றச் செய்கிறது. 57சபையானது காலங்கள்தோறும் அதன் கனிகளைக் கொடுத்து வந்துள்ளது. அதன் கிளைகள் கனி கொடுப்பதை நிறுத்திய போது, அவை நறுக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன (Pruned) ''நான் மெய்யான திராட்சச் செடி. என் பிதா திராட்சத் தோட்டக்காரர். என்னில் கனி கொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப் போடுகிறார் கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி அதை சுத்தம் பண்ணுகிறார்'' கனி கொடுக்காத கொடிகளை அவர் சுத்தம் பண்ணுவதில்லை. அவர் அதை அறுத்துப் போட்டுவிடுகிறார். ஏனெனில் அவை தொடக்கத்திலிருந்தே கனி கொடுக்கவில்லை. இயேசு கனிகளை விரும்புகிறார். அவருடைய மனைவி அவருடைய தன்மைகளைக் கொண்ட குழந்தைகளைப் பெற வேண்டும். அவள் மணவாட்டி குழந்தைகளைப் பெற்றெடுக்காவிட்டால், அதாவது 'வார்த்தை குழந்தைகளை' அவை ஸ்தாபனக் குழந்தைகளாகவே இருக்கும். ஏனெனில் அவள் உலகத்துக்கும், அவள் ஸ்தாபனத்துக்கும் தன் அன்பைத் திருப்புகிறாள். அதன் காரணமாக மறுபடியும் பிறந்த உண்மையான கிறிஸ்தவர்களை அவள் ஈனுவதில்லை. அத்தகையோரை ஈன்றெடுக்க அங்கு ஜீவனில்லை. ஆரஞ்சு செடியில் எலுமிச்சை கிளையை ஒட்டுப் போடுவது போன்றது இது. அந்த எலுமிச்சை கிளை எலுமிச்சம் பழங்களை மாத்திரம் தருமேயன்றி, ஆரஞ்சு பழங்களைத் தராது. ஏனெனில் அது தொடக்கத்திலேயே ஆரஞ்சு கிளையாக இருக்கவில்லை. ஆனால் தேவனுடைய முன்னறிவின்படியும் முன்குறித்தலின்படியும் ஆதி முதற்கொண்டே ஒரு ஆரஞ்சு செடி ஆரஞ்சு செடியாகவே இருக்க வேண்டுமென்றும், அது ஆரஞ்சு பழங்களை மாத்திரமே தர வேண்டுமென்றும் தேவனால் நியமிக்கப்பட்டிருந்தது. எனவே அது வேறு விதமாக இருக்கமுடியாது. 58ஜீவனுள்ள தேவனுடைய சபையும் அவ்விதமே அமைந்துள்ளது. கவனியுங்கள், யாராவது ஒருவரைத் தேவன் உபயோகிக்கத் தொடங்கினால், அந்த ஸ்தாபனத்தை அபகரித்துக் கொள்ள அநேகர் தோன்றுகின்றனர். எல்லா காலத்திலும் இது போன்றே நிகழ்ந்து வருகின்றது. மார்டின் லூத்தரின் வரலாற்றை நான் படித்திருக்கிறேன். அவர் கத்தோலிக்க சபைக்கு விரோதமாக எதிர்ப்பு தெரிவித்ததைக் காட்டிலும், அவர் மூலம் தோன்றின எழுப்புதலைத் தொடர்ந்து எழும்பின அநேக போலி சம்பவங்களைச் சமாளித்து, நீதிமானாக்கப்படுதல் என்னும் செய்தியில் உறுதியாய் நின்றதே மிகவும் கடினமான செயல் என்று அதில் எழுதப்பட்டிருந்தது. பாருங்கள்... அவைகள் யாவும் போலிகளும் விசுவாச துரோக.... 59லாஸ் ஏஞ்சலிஸ் பட்டணத்தில் ஒரு ஆலயத்தைக் கட்டின ஏய்மி செம்பிள் மாக்ஃபர்ஸன் (Aimee Semple Mcpherson) என்னும் அம்மையாரின் வாழ்க்கையைக் கவனியுங்கள். பெண் பிரசங்கிகள் ஒவ்வொருவரும் வேதத்திலிருந்து தான் போதிக்கின்றனர். மாமிச பிரகாரமான போலிகள். அவை அடிப்படையாக (Original) இருக்க முடியாது. சபையும் அவ்வாறே அமைந்துள்ளது. பட்டினத்திலுள்ள ஒரு சபைக்கு ஏதாவது ஒன்று கிடைத்தால், உடனே மற்ற ஸ்தாபனங்களுக்கு அதைத் தாங்க முடியாது. அவர்களுக்கும் அது கிடைத்துவிட்டது என்று கூறிக் கொள்வார்கள். ஆனால் அது மூலமாக இருக்க முடியாது. தேவனுடைய வார்த்தையோ மூலமானது. அதன் காலத்திலும் நேரத்திலும் பிதாவாகிய தேவனுடைய முன்குறித்தலின்படி அது உற்பத்தியாக வேண்டும். நீங்கள் எங்ஙனம் சபைக்குள் வரமுடியும்? நாமெல்லாரும் ஒரே ஆவியினால் கிறிஸ்துவின் சரீரத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். அப்படிப்பட்டவர் தாம் வார்த்தையாகிய மணவாட்டி. 60நாம் வாழும் நாட்கள் இறுதி நாட்களா என்பதைச் சற்றுக் கவனிப்போம். இப்பொழுது ஆதியாகமம் 5:18-24, லூக்கா 3:37-38, யூதா 14 இவைகளைப் படிப்போம். ஏனோக்கு... இங்கே இது சர்ப்பத்தின் வித்து எது என்று காட்டுகின்றது. காயீன் ஆதாமின் குமாரனானால் ஏனோக்கு எட்டாம் தலைமுறையாவான். காயீன் ஆதாமின் குமாரனல்ல. வேதத்தில் அவ்விதமாக எங்கும் சொல்லப்படவுமில்லை. ஆனால் காயீன் பொல்லாங்கனால் உண்டானவன் என்றுதான் வேதம் கூறுகின்றது. ஆதாம் அல்ல. பாருங்கள் காயீனே பொல்லாங்கனால் உண்டானவன்... 61ஏனோக்கு ஆதாமின் ஏழாந் தலைமுறையானவன். அவன் சபை காலங்களுக்கு உதாரணமாய் இருக்கிறான். அவனுக்கு முன்பிருந்த ஆறு பேரும் மரித்தனர். ஆனால் ஏனோக்கு மரணமடையாமல் எடுத்துக் கொள்ளப்பட்டான். ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். அவன் ஆதாமிலிருந்து ஏழாம் தலைமுறையானவன். ஏழாம் சபையின் காலத்தில் எடுத்துக் கொள்ளப்டுதல் நிகழும் என்பதை இது காண்பிக்கின்றது. நாம் ஏழாம் சபையின் காலத்தில் இருக்கிறோம் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. நம்மெல்லாருக்கும் அது தெரியும். ஏனோக்குக்கு முன்பிருந்தவர் அனைவரும் மரித்தனர். ஆனால் ஏனோக்கு மரணத்தைக் காணாதபடி எடுத்துக் கொள்ளப்பட்டான். அவன் காணப்படாமற் போனான். ஏனெனில் தேவன் அவனை எடுத்துக் கொண்டார். ஏனோக்கின் எடுத்துக் கொள்ளப்படுதல் ஒரு முன்னடையாளமாக உள்ளது. நமக்கு முன்பிருந்தவர் மரித்தனர். ஆனால் கடைசி காலத்திலுள்ள மணவாட்டியோ ஏழாம் சபையின் காலத்தில் வெளியே அழைக்கப்பட்டு, மரணமின்றி எடுத்துக் கொள்ளப்படுவாள். அது நிகழவிருக்கும் காலம் தான் இது என்று நாம் சாட்சி பகருகின்றோம். இன்னும் சற்று ஆழ்ந்து சிந்திப்போம். 62ஏழாம் சபையின் காலத்தின் வேறொரு அடையாளம் வெளி.10:6. ''தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப் போகிற போது தேவ இரகசியம் நிறைவேறும். புத்தகத்தில் அடங்கியுள்ள பரம இரகசியங்கள், ஏழாம் தூதனின் செய்தியின் போது வெளிப்பட வேண்டும். 'தூதன்' என்பது தேவ தூதனையும் தூது கொண்டு வரும் மனிதனையும் குறிக்கும். வெளி.10:5 தேவ தூதனையும், 6-ம் வசனம் பூமியிலுள்ள தூதுவனையும் குறிக்கின்றன. ஏழாம் தூதனுடைய செய்தி புறப்பட்டுச் சென்றபோது அவன் ஊழியம் தொடங்கின போதல்ல, அவனுடைய செய்தியை அவன் முழங்கின போது - தேவ இரகசியம் வெளிப்படும். இயேசு தம் ஊழியத்தைத் தொடங்கினபோது, அவர் வியாதியஸ்தரைச் சுகப்படுத்தினார். அவர் 'மகத்தான ரபீ' என்று அழைக்கப்பட்டார். ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று கருதினர். எல்லோரும் அவரைத் தம்தம் சபைக்கு அழைத்தனர். ஒரு நாள் அவர், ''நானும் என் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்'' என்று போதித்த போது, காரியங்கள் வித்தியாசமாகத் தொடங்கின. அவர், ''நீங்கள் மனுஷ குமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை'' என்று சொன்னார். உடனே யூதர்கள், “அவர் இரத்தத்தை உறிஞ்சும் பூதம் (Vampire) என்றனர். அவரோ அதற்கு வியாக்கியானம் ஒன்றும் அளிக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே அவர்கள் வாழும் காலத்துக்குரிய தேவனுடைய வார்த்தை வெளிப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டதைக் கண்டிருந்தனர். அதுவே அவர் அக்காலத்தின் தூதன் என்பதை நிரூபித்தது. அவர் விளக்கம் எதுவும் கூற அவசியம் இல்லை. அவர்களுடைய சீஷர்களும் அதற்கு விளக்கம் கூற முடியாமல் இருந்திருக்கலாம். ஆயினும் அவர்கள் அதை விசுவாசித்தனர். அவருடைய மாமிசத்தைப் புசித்து அவருடைய இரத்தத்தைப் பானம் பண்ணும் விஷயத்திற்கு அவர்கள் எவ்வாறு விளக்கம் கூற முடியும்? அவர்களால் முடியவே முடியாது. அவர்கள் உலகத் தோற்றத்துக்கு முன்பு தெரிந்து கொள்ளப்பட்டிருந்த காரணத்தால் அதை விசுவாசித்தனர். அவர்கள் உலகத் தோற்றத்துக்கு முன்பே தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்று இயேசு கூறினார். பாருங்கள்? அவர்கள் அதை விசுவாசித்தனர். 63ஏழாம் சபையின் காலத்தில், ஏழாம் தூதன் முழக்கமிடும் போது, தேவ இரகசியம் வெளிப்படும். முத்திரைகள் திறக்கப்படுவதைக் காண சீர்திருத்தக்காரரான லூத்தரும் வெஸ்லியும் போதிய காலம் உயிர் வாழவில்லை. சீர்திருத்தக்காரர்களுக்கு அவரவர் காலத்திற்குரிய செய்திகள் அளிக்கப்பட்டன. அக்காலத்து மக்களும் அச்செய்திகளை ஏற்றுக் கொண்டனர். ஆனால் பின்னர் அவர்கள் ஸ்தாபனங்களை உண்டாக்கிக் கொண்டனர். ஏன் அவ்விதம் நிகழ்ந்தது என்று தெரியுமா? 64நீங்கள் இயற்கையை மேற்கொள்ள முடியாது. இயற்கை தேவனுடைய செயல்களைக் குறித்து சாட்சி பகருகின்றது. தேவனுடைய திட்டம் இயற்கையுடன் இணையாகச் செல்கின்றது. காலையில் உதயமாகும் சூரியன் புதிதாய் பிறந்த குழந்தையைப் போன்று அதிக உஷ்ணமின்றி பலவீனமாயுள்ளது. காலையில் பத்து மணிக்கு அது அடையும் நிலையை, உயர்நிலைப் பள்ளியை விட்டு வெளிவரும் மாணாக்கனுக்கு ஒப்பிடலாம். பகல் நேரத்தில் அது தன் வாழ்க்கையைத் தொடங்குகிறது. மாலை மூன்று மணி அளவில், அது வயோதிபனைப் போல் ஆகின்றது. மாலை ஐந்து மணிக்கு அது வயது சென்று பலவீனமடைந்து கல்லறைக்குச் சென்றுவிடுகிறது. அதுதான் அதன் முடிவா? இல்லை, மறுநாள் காலையில் அது மறுபடியும் உதயமாகிறது. மரங்களைப் பாருங்கள். அவைகளில் இலைகள் தோன்றுகின்றன. ஆனால் இலைகள் இலையுதிர் காலத்தில் உதிர்ந்து, அம்மரத்தின் சத்து வேர்களை அடைகின்றது. அதுதான் அதன் முடிவா? இல்லை. வரும் வசந்த காலத்தில் அது புத்துயிர் பெறுகின்றது. 65சபைகளும் சீர்திருத்த காலத்தில் புத்துயிர் பெற்றன. கோதுமை மணி நிலத்தில் விழுந்து, இருளின் காலங்களில் இழைக்கப்பட்ட துன்புறுத்தலின் காரணமாக செத்துப் போனது, அது நிலத்தில் விழுந்து சாகவேண்டும். ஆவியைக் கொண்டுள்ள எவரும் அதைப் புரிந்து கொள்வார்கள். கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும். இருளின் காலங்களில் அது நிலத்தினடியில் சென்றது. அங்கே அது புதைந்து அழுகி, அதனின்று லூத்தரின் சபை என்னும் சிறு துளிர்கள் தோன்றின. லூத்தரின் சபையிலிருந்து மேலும் அநேக துளிர்கள் தோன்றின சுவிங்கிலியும் மற்றவரும், பின்னர் அது பட்டுக் குஞ்சம் (Tassel) கட்டத்தையடைந்தது. அதுதான் வெஸ்லி தோன்றிய சுவிசேஷகர்களின் காலமாகும். பட்டுக் குஞ்சத்திலிருந்து வஞ்சிக்கும் காலமாகிய பெந்தெகொஸ்தே காலம் பதராகத் தோன்றியது. கோதுமை சாகுபடி செய்யும் எவரும், அதில் தோன்றும் பதரைக் கண்டு, “கோதுமை எங்களுக்குக் கிடைத்துவிட்டது'' என்று தான் சொல்வார்கள். ஆனால் அதை உற்று நோக்கினால் கோதுமை மணி அக்கட்டத்தில் தோன்றவில்லை என்பது புலனாகும். அப்பொழுது தோன்றுவது கோதுமையைச் சுமக்கும் பதராகும். கடைசி நாட்களில் இவ்விரு ஆவிகளும் காண்பதற்கு ஒன்று போல் இருக்குமென்றும், கூடுமானால் அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் என்று இயேசு மத்தேயு 24:24-ல் கூறியுள்ளார் அல்லவா? 66தூதரின் மூலம் உயர எழும்பின ஜீவன் (சத்து) வெஸ்லியை உருவாக்கினது. வெஸ்லியின் மூலம் உயர எழும்பின ஜீவனே பெந்தெகொஸ்தேவை உருவாக்கினது. பெந்தெகொஸ்தேவினின்று வெளிவந்த ஜீவன் கோதுமை மணியை உற்பத்தி செய்தது. அவர்கள் எல்லோரும் ஜீவனைச் சுமந்தவர்கள். ஜீவன் அவர்கள் வழியாய் பாய்ந்து சென்றது. அந்தந்த காலங்களில் முறையே செய்திகள் அளிக்கப்பட்டு, கடைசியாக கோதுமை மணியில் முடிவடைகின்றது. கோதுமை மணி இறுதிக் கட்டத்தில் தோன்றி, எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளப்படுதலில் ஒன்று சேர்க்கின்றது. ஒவ்வொரு காலத்திலும் மணவாட்டி தோன்றுகிறாள். ஆனால் ஸ்தாபன தண்டோ உலர்ந்து மடிகின்றது. இந்த இறுதி நாட்களில் பதர் எப்படி தன்னை அகற்றிக் கொள்கிறது என்பதைக் கவனித்தீர்களா? கோதுமை மணி வளரத் தொடங்கும் போது, பதர், அதனின்று அகன்று செல்ல வேண்டும். 67நீங்கள் பதரைத் திறந்து பார்த்தால், கோதுமை மணியின் மொட்டு ஒன்றைக் காணலாம். அது மிகவும் சிறியதாயிருப்பதால் பூதக் கண்ணாடியின் மூலமே அதைக் காண முடியும். அது சிறியதாகத் தொடங்கினாலும், அது வளர ஆரம்பித்துவிடுகின்றது. அதனைப் பாதுகாக்க பதர் அவசியமாயுள்ளது. அது வளர்ந்து, செய்தியானது பரவும் போது பதர் அதினின்று அகன்று சென்றுவிடும். ஜீவன் பதரிலிருந்து கோதுமை மணிக்குள் நுழைந்து விடுகிறது. ஒவ்வொரு காலத்திலும் இவ்விதமாகவே நிகழ்ந்தது... இயற்கையைப் போலவே... தேவனும் இவ்வழியிலே தன் காரியங்களைத் தொடர்ச்சியாய் செய்கிறார். 68ஜீவன் கோதுமை மணிக்குள் நுழைந்து கொண்டிருக்கும் ஏழாம் சபையின் காலத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த இறுதி காலத்தில் எல்லாமே கோதுமை மணியில் முடிவடைய வேண்டும். நீங்கள் லூக்கா. 17: 28:30 படிப்பீர்களானால், முன்பிருந்த காலம் மறுபடியும் தோன்றியிருப்பதை அறிந்து கொள்ளலாம். ''லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவும் நடக்கும். ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷத்து எல்லாரையும் அழித்து போட்டது. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும் லூக்.17: 28-30. 'வெளிப்படுவது' என்றால் என்ன? இந்தநாளில் இயேசு எவ்விதம் இருக்கிறார் என்பதை மக்களுக்கு உணர்த்துவதே. இந்த நாளைக்குரிய வார்த்தையானது பரிசுத்த ஆவியின் வல்லமையினால் வெளியரங்கமாக்கப்பட்டு, இயேசுவை மறுபடியுமாக நம் மத்தியில் வாழச் செய்கின்றது. அந்த நாளில் இயேசு ஒரு மனிதனுக்குள் காணப்பட்டார். நாம் படிக்கும் அதே வேதாகமத்தையே இயேசுவும் படித்தார். அவர் ஆதியாகமம் 18: 9-15 வசனங்களைக் குறிப்பிட்டார். 69அவர் ''ஒரு உற்பவ காலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குழந்தை இருப்பாள்'' என்றார். இது நிறைவேறும் என்பதை சாராளால் விசுவாசிக்கவே முடியவில்லை. சாராள் அவருக்குப் பின்புறமாக கூடாரத்திலிருந்தாள். அவர், ''சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளை பெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?“ என வினவினார். ஆபிரகாம் அவரை ஆண்டவர் - சர்வ வல்லமையுள்ளவர் என்று அழைத்தான் என்பதைக் கவனியுங்கள். கடைசி நாட்களில் இது போன்ற தோற்றம் ஒன்று உண்டாகுமென்று வேதம் முன்னறிவித்துள்ளது. “இவை சம்பவிப்பதை நீங்கள் காணும் போது, இவை இவ்விதம் சம்பவிக்கத் துவங்கும் போது காலம் சமீபமாயிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்'' 70உலகம் இப்பொழுது சோதோமின் நிலையில் உள்ளது. ஜனங்கள் நெறி தவறினவர்களாக ஆண்புணர்ச்சிக்காரராக இருக்கின்றனர். அவர்கள் சிந்தை குலைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒழுக்கம் என்பதேயில்லை. நம் பெண்மணிகளைப் பாருங்கள். மிகவும் ஒழுக்கம் கெட்ட நடத்தையில் அவர்கள் ஈடுபடுகின்றனர். “மெதோடிஸ்டுகள் தான் அப்படிப்பட்டவர்கள்” என்று நீங்கள் கூறலாம். இல்லை, பெந்தெகொஸ்தரும் அப்படிப்பட்டவர்களே, எல்லோரும் அதே நிலையில் காணப்படுகின்றனர். நமது ஆண்களைக் கவனியுங்கள். தேவனுடைய வார்த்தைக்குப் பதிலாக அவர்கள் பரம்பரையாய் வந்து கொண்டிருக்கும் ஸ்தாபன பாரம்பரியங்களைக் கைக்கொள்கின்றனர். தேவனே இக்காலத்தில் பரிபூரணமாக கிரியை நடப்பிப்பதைக் கண்ட பின்பும், ஸ்தாபனங்களை விட்டு வெளியே வர அவர்கள் மறுக்கின்றனர். அவர்கள் குருடர்கள், அவர்களால் காண முடிகிறதில்லை. அவர்கள் ஒருக்காலும் காண்பதில்லை. நாம் துரிதமாக முடிக்க முயலும் இந்நேரத்தில், இன்று என்ன நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றது என்பதைக் கவனியுங்கள். அதோ அந்த ஸ்திரீ இங்கிருந்து வெளியில் செல்ல விரும்புகிறார்கள் என்பதை, தம்முடைய கை அசைப்பினால் தெரிவிக்கிறார்கள். அப்படியானால் அவர்கள் செல்லட்டும். 71கவனியுங்கள். ஏனோக்கு சபைக்கு முன்னடையாளம் மாத்திரமல்ல, ஏழாம் சபையின் காலத்துக்கும் முன்னடையாளமாகத் திகழ்கிறான். நீங்கள் அதை நினைக்கிறீர்களா? ஏழு சபை காலங்கள்... கவனியுங்கள், அந்த சத்தத்தில்... ஏழு சபைகளுக்கும் ஏழு தூதர்கள் இருந்தனர் என்று நீங்கள் நம்புகின்றீர்களா? வேதம் உண்மையென்று நீங்கள் விசுவாசித்தால், இதையும் நீங்கள் நம்ப வேண்டும். நாம் ஏழாம் சபையின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஏழாம் சபை காலத்தின் தூதன் தன் செய்தியை முழங்கத் தொடங்கும் போது காலங்கள் தோறும் புரட்டப்பட்ட எல்லா சத்தியமும் நேராகி, இந்தச் சமயத்தில் ஜனங்களுக்கு வெளிப்படுத்தப்படும். இக்கடைசி காலத்தில் மனுஷகுமாரன் மக்களின் மத்தியில் பிரசன்னமாகி, அவர் செய்யப் போவதாக கூறியிருந்த அனைத்தையும் செய்து காட்டி, செய்தி உண்மையென்று நிரூபிப்பதை நாம் கண் கூடாகக் காண்கிறோம். ஏழு ஜாமங்கள் உள்ளன. அவர் முதல், இரண்டாம் அல்லது மூன்றாம் ஜாமத்தில் வரவில்லை. அவர் ஏழாம் ஜாமத்தில் தான் வந்தார். ஆதாமுக்கு ஏழாம் தலைமுறையான ஏனோக்கு மணவாட்டிக்கு முன்னடையாளமாய் இருந்தான். அவன் எடுத்துக் கொள்ளப்பட்டான். நோவா யூதர்களில் மீதியானவர்களுக்கு முன்னடையாளமாயிருக்கிறான். வேதாகம் காலங்களில் 'ஜாமம்' என்று அழைக்கப்பட்டது. மணி, நிமிடம் கணக்கைக் கொண்டதல்ல. இரவு நேரம் மூன்று ஜாமங்களாகப் பிரிக்கப்பட்டது. 72(இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது நான் துரிதமாக செல்ல விரும்புகிறேன், ஏனெனில் இந்த அறை அவர்களுக்கு தேவைப்படுகிறது). இல்லை, இந்த வேதாகமம் பிரிக்கப்படவில்லை… அல்லது, வேதாகம நேர கணக்கிடுதலில் இரவு மணிவேளையில் (hours) பிரிக்கப்படவில்லை. ஆனால் அது ஜாமத்தில் (watches) பிரிக்கப்படவில்லை. மூன்று ஜாமங்கள் இருந்தது. இப்பொழுது, முதல் ஜாமம் 9:00 மணிக்கு துவங்கி 12:00 முடியும்; இரண்டாவது ஜாமம் 12:00 மணிக்கு துவங்கி 3:00 மணிக்கு முடியும், இரவின் மூன்றாவது ஜாமம் 3:00 மணிக்கு துவங்கி 6:00 மணிக்கு முடியும். 9 முதல் 12 மணி முடிய முதல் ஜாமமும், 12 முதல் 3 மணி முடிய இரண்டாம் ஜாமமும், 3 முதல் 6 மணி முடிய மூன்றாம் ஜாமமுமாகக் கருதப்பட்டன. “மூன்று மூன்றுகள்” ஒன்பதாகும், பரிபூரணமில்லாத எண். ஆனால் எடுத்துக் கொள்ளப்படுதல் ஏழாம் ஜாமத்தில் நிகழும். அது காலை 6 மணி முதல் 9 மணிக்குள் சம்பவிக்கும் என்று நம்புகிறேன். பிரகாசமும் மந்தாரமுமில்லா காலையிலே கிறிஸ்துவுக்குள் மரித்தோர் எழுந்து, அவர் உயிர்த்தெழுதலின் மகிமையைப் பகிர்ந்து கொள்வர் ஆகாயத்திற்கப்பால் உள்ள தங்கள் வீட்டில் தெரிந்து கொள்ளப்பட்டோர் ஒன்று சேர்கையில், மறுகரையில் கணக்கெடுப்பின் நேரத்தில் நான் அங்கிருப்பேன். 73நாம் ஆங்கிலத்தில் உபயோகிக்கும் 'Rapture' என்னும் பதம் வேதத்தில் எங்குமில்லை. வேதம் “எடுத்துக் கொள்ளப்படுதல்” (caught up) என்னும் பதத்தையே உபயோகின்றது. இந்த மகத்தான எடுத்துக் கொள்ளப்படுதல் எந்த வரிசைக் கிரமத்தில் (order) நிகழும் என்பதை 11தெசலோனிக்கேயர் அல்லது 1 தெசலோனிக்கேயர் 4: 13-17 வசனங்களில் வாசிக்கலாம். அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போல் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே. அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடு கூடக் கொண்டு வருவார். கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது. கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை (அதாவது அவர்களைத் தடை செய்வதில்லை). கர்த்தர் தாமே (நன்றாய் கவனியுங்கள்) ஆரவாரத்தோடும் பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 74எனவே, இங்கே இப்பொழுது ஒரு பெரிய காரியம் நிகழ்ந்ததை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன். இதை நீங்கள் தவறவிட வேண்டாம். பாருங்கள், இப்பொழுது கவனியுங்கள், மூன்று காரியங்கள் இருக்கிறது என்று 2தெசலோனிக்கேயரில் வார்த்தை கூறுகிறது… கர்த்தர் தாமே தோன்றுவதற்கு முன்னர் மூன்று காரியங்கள் நிகழ வேண்டும் என்று 13ம் வசனம் முதல் 16ம் வசனம் வரைக்கும் தெரிவிக்கிறது. இப்பொழுது நாம் விரைந்து செல்வோம் எனவே நாம் துரிதமாக முடிக்க முடியும், பாருங்கள். முதலாவது நிகழும் காரியம், கவனியுங்கள்; ஆரவாரம், சத்தம் மற்றும் எக்காளம். அதை இப்பொழுது படித்து, அது சரியாய் இருக்கிறதா என்று பார்ப்போம், கவனியுங்கள்! கர்த்தர் தாமே (16ம் வசனம்) வானத்திலிருந்து ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும் மற்றும்… தேவனுடைய சத்தத்தோடும் வருவார். 75அவர் இறங்கி வரும்போது இவை மூன்றையும் அவரே செய்கிறார். கர்த்தர் தாமே (நன்றாய் கவனியுங்கள்) ஆரவாரத்தோடும் பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். ஆரவாரம் என்பது செய்தியாகும். அது ஜீவ அப்பமாக முதலில் புறப்பட்டுச் சென்று மணவாட்டியைப் பிறப்பிக்கின்றது. எந்த ஒரு செயலையும் கர்த்தர் தமக்கே உரிய பிரத்தியேக விதத்தில் செய்கிறார். அதினின்று அவர் எக்காலத்தும் மாறுவதில்லை. அவர் என்றென்றும் மாறாத தேவன். தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் அவர் ஒரு காரியத்தையும் செய்யார் என்று அவர் ஆமோஸ் 3-7-ல் உரைத்துள்ளார். அவர் வாக்களித்துள்ள விதமாகவே அவர் நிச்சயம் செய்வார். 76நாம் சபையின் காலங்களைக் கடந்து வந்துள்ளோம். கடைசி நாட்களில் தீர்க்கதரிசி மறுபடியும் தோன்றுவார் என்று நமக்கு மல்கியா 4-ல் வாக்களிக்கப்பட்டுள்ளது. அந்த தீர்க்கதரிசி எத்தன்மையைப் பெற்றிருப்பார் என்பதை நாம் ஆராயலாம். 'எலியா'வின் ஆவியைத் தேவன் ஐந்து முறை உபயோகிப்பார். முதலில் எலியா தீர்க்கதரிசிக்குள், பின்பு எலிசாவுக்குள், பின்னர் யோவான் ஸ்நானனுக்குள் அதன் பின்னர் சபையை வெளியே அழைப்பதற்கு, பின்னர் முடிவில் யூதர்களில் மீதியானவர்களுக்கு - ஐந்து முறை. கிருபை, இயேசு, விசுவாசம், 'ஐந்து' என்னும் எண் கிருபைக்கு அடையாளமாயுள்ளது. 77நீங்கள் ஞாபகம் கொள்ளுங்கள். செய்தியைக் குறித்து தேவன் வாக்களித்துள்ளார். ஸ்தாபன முறைமைகள் குழப்பமுறச் செய்த செய்திகளின் இரகசியத்தை சரியானபடி வெளிப்படுத்துவதற்கு தேவனிடமிருந்து நேரடியாக அனுப்பப்பட்ட ஒரு தீர்க்கதரிசி அவசியம். தீர்க்கதரிசி ஒருவரைக் காலத்தில் அனுப்புவதாக அவர் வாக்களித்துள்ளார். பாருங்கள்? தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசியிடம் மாத்திரமே வருமேயன்றி, வேத பண்டிதர்களிடமல்ல என்பதை அறியவும். தேவனுடைய வார்த்தையைப் பிரதிபலிக்கிறவனே தீர்க்கதரிசி. அவன் தனது சொந்த கருத்துக்களைப் பேச முடியாது. தேவன் வெளிப்படுத்தினவைகளை மாத்திரமே அவன் பேச முடியும். தன் உரிமையை விற்றுப் போட்ட பிலேயாம் தீர்க்கதரிசியும் கூட ''கர்த்தர் வாயில் அருளினதைத் தவிர ஒரு தீர்க்கதரிசி வேறென்ன கூற முடியும்?'' என்றான் தேவன் கூறச் சொன்னதையே ஒரு தீக்கதரிசி உரைக்க முடியும். அவன் அதற்கென்றே பிறந்திருக்கிறான். அதற்கு மேல் நீங்கள் எதுவும் சொல்ல முடியாது... 78நீங்கள் பார்த்துக் கொண்டேயிருக்கும் போது என் கண்களைத் திறக்க முடியவில்லை என்று சொல்ல முடியாது. அது உங்களால் முடியும். நீங்கள் இல்லாத ஒன்றாக உங்களைப் பாவனை செய்து கொள்ள முடியாது. நீங்கள் மனிதராயிருந்தால், நாயாக இருக்க முடியாது. கடந்து சென்று காலங்களில், ஸ்தாபன குழுக்கள் எல்லாவற்றையும் குழப்பமுறச் செய்தபோது, அதை நேராக்கத் தேவன் ஏசாயா, எரேமியா, எலியா போன்ற தீர்க்கதரிசிகளை எழுப்பினார். ஒரு தீர்க்கதரிசி எந்த ஒரு குழுவிலிருந்தும் தோன்றினதே கிடையாது. அவன் யாருக்கும் சொந்தமானவன் அல்ல. அவன் தேவனுடைய வார்த்தையை மாத்திரமே பேசுவான். சத்தியத்தை அறிவிக்கும் இந்த முரடான மனிதனைக் கர்த்தர் அழைத்துக் கொள்ள எத்தனிக்கும் போது, அவன் அவ்விடத்தை விட்டு நீங்குவான். அது எப்பொழுதுமே… நீங்கள் அவனிடத்தில் இவ்வழியில் கூறலாம், அவர், “உங்களில் ஒருவன் ஆவிக்குரியவனாக அல்லது தீர்க்கதரிசியாய் இருப்பானாகில்…” 79சபையில் தீர்க்கதரிசன வரம் பெற்றுள்ளவர் உள்ளனர். ஆனால் தீர்க்கதரிசி என்பவனோ முன்குறிக்கப்பட்டு, அந்தக் காலத்திற்கென்று நியமிக்கப்பட்டவன். பாருங்கள்? ஆம், ஐயா. சபையில் ஒரு தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டால், சபை அதை ஏற்றுக் கொள்ளு முன்னர், இரண்டு அல்லது மூன்று நபர்கள் அது சரியா இல்லையா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். 'தீர்க்கதரிசிகள்' இரண்டு பேராவது மூன்று பேராவது பேசலாம், மற்றவர்கள், நிதானிக்கக் கடவர்கள். ஆனால் தீர்க்கதரிசியாகத் தெரிந்து கொள்ளப்பட்டவனோ, அவனுடைய காலத்தில் தேவனுடைய வார்த்தையாகத் திகழ்கிறான். அவன் முன்னால் யாரும் நிற்க முடியாது. தேவன் அவன் மூலம் பிரதிபலிப்பதை நீங்கள் காணலாம். இந்தக் கடைசி நாட்களில் ஸ்தாபனங்கள் அடைந்துள்ள குழப்பங்களிலிருந்து மணவாட்டியை விடுவித்து வெளியேற்ற அத்தகைய தீர்க்கதரிசி ஒருவரை மறுபடியும் அனுப்புவதாகத் தேவன் வாக்களித்துள்ளார். மணவாட்டியை விடுவிக்க ஒரே வழி அதுவே. 80ஸ்தாபனங்கள் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளமுடியாது. பெந்தெகொஸ்தரும் இன்றுள்ள நிலையில் இந்தச் செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல முடியாது. ஸ்தாபனங்கள் அனைத்தும் ஒன்றோடொன்று விரோதமாயுள்ளன. எல்லாரும் ஒரே குழப்பமாக அமைந்துள்ளன. அவர்கள் ஸ்தாபனங்களின் கோட்பாடுகளைப் பின்பற்றுகின்றனர். செய்தி புறப்பட்டுச் சென்ற ஒவ்வொரு காலத்திலும், அவர்கள் ஸ்தாபனங்களை உண்டாக்கிக் கொண்டு உடனே ஆவிக்குரிய பிரகாரம் மரித்தனர். மற்றவர் செய்தது போன்றே பெந்தெகொஸ்தரும் செய்துவிட்டனர். சரித்திரக்காரர்கள் நான் கூறுவது தவறென்று நிரூபிக்கட்டும் பார்க்கலாம். 81அசெம்பளி ஆப் காட் (Assembly of God) ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்களே! உங்கள் முன்னோர்கள் பெந்தெகொஸ்தே இயக்கத்தின் தொடக்கத்தில் ஸ்தாபனங்களை விட்டு வெளியே வந்தனர். அவர்கள் ஆர்ப்பரித்து, கர்த்தரைத் துதித்து, ஸ்தாபன முறைகளுக்கு விரோதமாய் நின்றனர். ஆனால் நாய் தான் கக்கினதை மறுபடியும் தின்பது போலவும், பன்றி சேற்றுக்குத் திரும்புவது போலவும், நீங்களும் மற்றவர்களைப் போல் ஸ்தாபனத்திற்குள் மறுபடியும் சென்றுவிட்டீர்கள். ஸ்தாபன முறைகளில் நீங்கள் அதிக ஈடுபாடு கொண்டிருக்கும் காரணத்தால், உங்கள் பேரிலிருந்த அனுதாபம் அனைத்தையும் களைந்துவிட்டீர்கள். உங்களிடம் ஐக்கியங் கொள்ள விரும்பும் யாவரும் ஐக்கிய சீட்டைப் (Fellowship Card) பெற்றிருக்க வேண்டுமென நீங்கள் வற்புறுத்துகின்றீர்கள். 'ஒருத்துவம்' (Oneness) போதகத்தைப் பின்பற்றுகிறவர்களே! கர்த்தர் உங்களுக்கு ஒரு செய்தியைக் கொடுத்தார். நீங்கள் தாழ்மையுள்ளவர்களாக அதில் நிலைத்திருப்பதை விட்டுவிட்டு, ஸ்தாபனம் ஒன்றை உண்டாக்கிக் கொண்டீர்கள். நீங்களும் மற்றவர்களைப் போலாகி அதே நிலையில் இப்பொழுதும் இருக்கின்றீர்கள். ஆனால் கர்த்தருடைய ஆவியானவரோ முன்னேறிச் சென்று கொண்டிருக்கின்றார். கர்த்தர் நட்டார், நான் இரவும் பகலும் அதற்குத் தண்ணீர் பாய்ச்சுவேன். இவையாவும் நிகழ வேண்டுமென அவர் நியமித்துள்ளதால், அவை அங்ஙனமே நிறைவேறும். 82கர்த்தர் வானத்திலிருந்து இறங்கி வரும்போது, முதலாவதாக ஆரவாரம் புறப்பட்டுச் சென்றது. ஆரவாரம் என்பது ஜனங்களை ஒன்று கூட்டுவதற்கென்று அளிக்கப்படும் செய்தியாகும். இப்பொழுது தீவட்டிகளை சுத்தப்படுத்தும் (trim) சமயமாகும். “எழுந்து, உன் தீவட்டியை சரிபடுத்து'', இது ஏழாம் ஜாமத்தில் உரைக்கப்பட்டது. ஆறாம் ஜாமத்திலல்ல. ஏழாம் ஜாமத்தில். ”மணவாளன் வருகிறார், எழுந்து உன் தீவட்டியைச் சரிபடுத்து புத்தியுள்ள கன்னிகைகள் அதற்குக் கீழ்ப்படிந்தனர்“. சிலருடைய தீவட்டிகளில் எண்ணெய் இல்லாமல் இருந்தது. இது தீவட்டியைச் சரிபடுத்தும் நேரம். இது மல்கியா 4-ம் அதிகாரத்தின் நேரம். இது லூக்கா 17-ம் அதிகாரத்தின் நேரம்! இக்காலத்திற்கென வேதம் விளம்பியுள்ள தீர்க்கதரிசனங்கள் அனைத்தும் நிறைவேறும் நேரம் இது. 83அது தத்ரூபமாக நிறைவேறுவதை நீங்கள் காண்கிறீர்கள். என் அருமை சகோதரனே, சகோதரியே! பரலோகத்தின் தேவன் சித்தம் கொண்டால், நான் இந்த மேடையின் மீதே மரித்துவிடக் கூடும். இப்பொழுது நிகழ்ந்து கொண்டிருப்பவைகளை நீங்கள் உன்னிப்பாகக் கவனியுங்கள், அவை பிரம்மாண்டமானவை. கர்த்தர் பரலோகத்திலிருந்து இறங்கிவந்து, முன்பு செய்தது போன்றே, இப்பொழுதும் மக்களுக்குத் தம்மை வெளிப்படுத்துவதை நீங்கள் காண்கிறீர்கள் அல்லவா? திறக்கப்பட்ட வேத புத்தகம் எனக்கு முன்பாக இருக்கின்றது. நான் கூறுவது முற்றிலும் உண்மை. ஸ்தாபனங்கள் மரணமடைந்துவிட்டன. அவை மறுபடியும் உயிர் பெற முடியாது. அவை சுட்டெரிக்கப்படும். உமியை நீங்கள் அவ்விதம் தான் சுட்டெரிக்கின்றீர்கள். நண்பனே, அவைகளினின்று ஓடிப்போ. கர்த்தருக்குள் நுழைந்து கொள். 'நான் பெந்தெகொஸ்தரைச் சேர்ந்தவன்' என்றும் 'மெத்தடிஸ்ட்'ஐ சேர்ந்தவன் என்றும் சொல்லிக் கொள்ளாதே. கிறிஸ்துவுக்குள் சென்றுவிடு. நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருந்தால், வேதத்தில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு வார்த்தையும் விசுவாசிப்பீர்கள். மற்றவர்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை. கர்த்தர் அதை வெளிப்படுத்தித் தருவார். அவர் தம் வார்த்தையின் மீது பரிசுத்த ஆவியை ஊற்றும் போது என்ன நேரிடுகின்றது? விதையின் மேல் தண்ணீர் ஊற்றினால் என்ன நேரிடுமோ அது தான் அதற்கும் நேரிடும். அது உயிர்பெற்று தன் இனத்தைப் பிறப்பிக்கும். 84''நான் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுள்ளேன்“ என்று நீங்கள் கூறலாம். நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள் என்பதற்கு அது அறிகுரியல்ல. மனிதன் ஒவ்வொருவனும் மூன்று பாகங்களைக் கொண்டவனாயிருக்கிறான். உங்களுக்குள்ளே ஆத்துமா இருக்கின்றது. அதற்கு வெளியில் ஆவி இருக்கின்றது. இவையிரண்டும் சரீரத்தில் குடிகொண்டுள்ளன. உங்கள் சரீரத்திற்கு ஐம்புலன்கள் உள்ளன. அவை மூலம் இவ்வுலகின் பொருட்களுடன் நீங்கள் தொடர்பு கொள்கின்றீர்கள். ஆவிக்குரியவைகளை இந்த ஐம்புலன்களின் உதவியால் அறிந்துகொள்ள முடியாது. ஆவிக்கும் ஐம்புலன்கள் உள்ளன. அவை அன்பு, மனச்சாட்சி போன்றவை. ஆனால் அவைகளுக்கும் உள்ளே அமைந்திருக்கும் ஆத்துமா தான் உண்மையான நீ. அங்கு தான் நீ வாழ்கின்றாய். நீ யாரென்பதை அது தான் அறிவிக்கும். தீயோர் மேலும் நல்லோர் மேலும் மழை பொழிகின்றது என்று இயேசு கூறினாரல்லவா? நிலத்தில் புற்பூண்டு விதையையும், கோதுமை விதையையும் நட்டு, அவை இரண்டிற்கும் உரமிட்டு தண்ணீர் பாய்ச்சினால், இவையிரண்டும் ஒரே தண்ணீரை உட்கொண்டு வளரும். ஆனால் புற்பூண்டு விதை புற்பூண்டைத்தான் தோன்றச் செய்யும். ஏனெனில் ஆரம்பத்திலேயே அது புற்பூண்டாகவே இருந்தது. புற்பூண்டும் கோதுமை பயிர் போலவே கைகளை உயர்த்தி சத்தமிடும். 85கடைசி நாட்களில் கள்ளச் கிறிஸ்துக்கள் எழும்புவார்கள் என்று வேதம் கூறவில்லையா? 'கள்ள இயேசுக்கள்' என்று கூறாமல் 'கள்ளக் கிறிஸ்துக்கள்' என்று அது கூறுகின்றது. 'கிறிஸ்து என்பதற்கு அபிஷேகம் பெற்றவன்' என்று பொருள். அவர்கள் ஸ்தாபன முறைமைகளில் அபிஷேகம் பெற்றவர்கள். தேவனுடைய வசனத்திலல்ல. ஆனால் வார்த்தையோ தனக்குத் தானே சாட்சி பகரும். அதற்கு வேறு யாரும் தேவையில்லை. கள்ள அபிஷேகம் பெற்றவர்கள் எழும்புவார்கள். ஒலிநாடாவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ள அதைக் குறித்த செய்தியை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். “நீங்கள் இயேசுவா?'' என்று அவர்களைப் பார்த்துக் கேட்டால் அவர்கள் ”இல்லவே இல்லை'' என்பார்கள். அவர்கள் மேல் தங்கியிருப்பது உண்மையான பரிசுத்த ஆவிதான். காய்பாவும் பிலேயாமும் இதைப் பெற்றிருந்து தீர்க்கதரிசனம் உரைத்தனர். ஆனால் அதற்கும் அவர்களுக்குள் இருந்த ஆத்துமாவுக்கும் எவ்வித தொடர்புமில்லை. அது தேவனுடைய வித்தாயிருந்து, ஆதிமுதற் கொண்டே முன்குறிக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் உன் காரியங்கள் முடிவுற்றன என்பதே பொருள். நீங்கள் எவ்வளவுதான் கூச்சலிட்டு, அன்னிய பாஷை பேசினாலும் எனக்குக் கவலையில்லை. ஒரு ஊமுள்ளும் கூட தன்னை மற்றவைகளோடு சமமாக்கிக் கொள்ளக் கூடும். அஞ்ஞானிகளும் கூட கூச்சலிட்டு, அன்னிய பாஷை பேசி, மண்டை ஓட்டிலுள்ள இரத்தத்தைக் குடித்து, பிசாசைக் கூப்பிடுவதை நான் கண்டிருக்கிறேன். அத்தகைய உணர்ச்சிகளின் பேரில் சார்ந்திருக்க வேண்டாம். அதை மறந்துவிடுங்கள். உங்கள் இருதயம் வார்த்தையில் நிலைத்திருந்தால், அதுவே கிறிஸ்துவாகும். தேவனுடைய வார்த்தையை உங்கள் இருதயங்களில் கொண்டு, அது தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொள்வதை நீங்கள் பாருங்கள். அது மற்ற வித்துக்களைப் போன்று அந்தந்த காலத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். 86லூத்தர் சிறு கிளையை மாத்திரம் தோன்றச் செய்தார். நாமோ இப்பொழுது கோதுமை மணிகள் தோன்றும் காலத்தில் இருக்கிறோம். உத்தமமான லூத்தர் அநேக உத்தமமான லூத்தர்களைத் தோன்றச் செய்தார். அவ்வாறே உத்தமமான பெந்தெகொஸ்தே இயக்கமும் உண்மையான பெந்தெகொஸ்தர்களைத் தோன்றச் செய்தது. ஆனால் நாம் அக்காலங்களையெல்லாம் கடந்து, இப்பொழுது முன்னேறிக் கொண்டிருக்கிறோம். கத்தோலிக்க சபை பெந்தெகொஸ்தே அனுபவத்துடன் தொடங்கினது என்று உங்களுக்குத் தெரியுமா? தற்போதைய பெந்தெகொஸ்தே சபை ஒருக்கால் 2000 ஆண்டுகள் நீடித்திருந்தால், இப்பொழுதுள்ள கத்தோலிக்க சபையைக் காட்டிலும் மிகவும் மோசமான நிலையில் இருந்திருக்கக் கூடும். அது உண்மை. நான் நேசிக்கும் என் சகோதரர், சகோதரிகளிடம் இதைக் கூறுகிறேன்; தேவன் அதை அறிவார். உங்களை நான் பரலோகத்தில் நியாயாசனத்துக்கு முன்பாக சந்திக்க வேண்டும். அந்த நாள் வருவதற்கு இன்னும் அதிக நாட்கள் இல்லை. எனவே, சத்தியத்துக்கு நான் சாட்சியாக இருக்கவேண்டும். 87நான் முதன் முதலில் கூட்டங்கள் நடத்த ஆரம்பித்த போது, வியாதியஸ்தருக்காக ஜெபித்தேன். அது மிகவும் நன்று. அதன் பின்பு நான் ஒரு செய்தியுடன் உங்களிடம் வந்தேன். மனிதன் ஒருவன் தேவனுடைய அற்புதங்களை உத்தமமாகச் செய்து கொண்டே செல்லலாம். ஆனால் அவன் ஸ்தாபனத்தில் நிலை கொண்டிருந்தால், அது தேவனால் உண்டானதல்ல; ஏனெனில் ஸ்தாபனங்களின் நடவடிக்கைகளே அதற்குச் சாட்சியாயுள்ளன. இயேசுவும் ஜனங்களின் கவனத்தை ஈர்க்க வேண்டுமெனக் கருதி, வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்தினார். அவரது செய்தி பின்னர் தொடர்ந்தது. தெய்வீக சுகமளித்தல், அற்புதங்கள் போன்றவை மக்களுடைய கவனத்தைக் கவர வேண்டுமென்று கருதிச் செய்யப்படுபவையாகும். ஆனால் செய்திதான் முக்கியமானது. ஜனங்களுடைய ஆதரவைப் பெற இயேசு அற்புதங்களைச் செய்தார். அப்பொழுது தான் அவர்கள் அமர்ந்து செய்தியைக் கேட்பார்கள். செய்தியைக் கேட்டவர்களில் சிலர் நித்திய ஜீவனுக்கென்று நியமிக்கப்பட்டவர்களாயிருந்தனர். விதைக்கப்பட்ட சில விதைகள் நிலத்தில் விழுந்தன. ஆகாயத்துப் பறவைகள் அவைகளைப் பட்சித்துப் போட்டன. வேறு சில விதைகள் முட்களின் மத்தியில் விழுந்தன. ஆனால் சில கோதுமை மணிகள், பண்படுத்தி ஆயத்தமாக்கப்பட்டிருந்த நல்ல நிலத்தில் விழுந்து பலனைக் கொடுத்தன. 88எனவே, ஆரவாரம் முதலாவது காரியமாய் அல்லது எக்காளம் அல்லது சத்தம் முதலாவது காரியமாய் இருக்கிறது - ஆரவாரம் பின்னர் சத்தம், அதன் பின்னர் எக்காளம். ஆரவாரம் என்பது ஒரு தூதன் மக்களை ஆயத்தப்படுத்துவது. இரண்டாவது உயிர்த்தெழுதலின் சத்தம். பரிசுத்த யோவான் 11:38 மற்றும் 44ல் கல்லறையிலிருந்து லாசருவை அழைத்த உரத்த சத்தமான அதே சத்தம். மணவாட்டியை ஒன்று கூட்டப்பட்ட பின்னர் மரித்தோர் உயிரோடு எழுந்து, அவர்களோடு கூட எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இப்பொழுது, மூன்று காரியங்கள் நிகழ்வதை கவனியுங்கள். அடுத்து என்னவாயிருக்கிறது? எக்காளம், சத்தம் - ஆரவாரம், சத்தம் மற்றும் எக்காளம். 89மூன்றாவதாக எக்காளம். எக்காளம் ஊதப்பட்டு, ஜனங்கள் விருந்துக்கு அழைக்கப்படுகின்றனர். அதுதான் ஆட்டுக்குட்டியானவர் மணவாட்டியுடன் ஆகாயத்தில் நடத்தும் விருந்தாகும். முதலாவதாக, மணவாட்டியை ஒன்று சேர்க்க அழைக்கும் செய்தி. இரண்டாவதாக, முன் காலங்களில் நித்திரையடைந்துள்ள மணவாட்டியை உயிரோடெழுப்புதல். கடைசியாக நிகழ்வது எக்காளம் - ஆகாயத்தில் நடக்கும் விருந்துக்காக உயிரோடெழும்பின மணவாட்டியும், உயிரோடுள்ள மணவாட்டியும் ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதல். நண்பர்களே, இவையனைத்தும் நிகழவேண்டும். நாம் அதற்காக ஆயத்தமாகிவிட்டோம். ஸ்தாபனங்களை விட்டு வெளியே வந்த சபை இப்பொழுது சூரிய வெளிச்சத்தில் போடப்பட்டு முதிர்வடைய வேண்டும். சற்று பின்பு எடுத்துக் கொள்ளப்படுதல் உண்டாகும். கோதுமை தண்டு சுட்டெரிக்கப்பட வேண்டும். ஆனால் கோதுமை மணியோ களஞ்சியத்தில் சேர்க்கப்படும். பாருங்கள்? 90நீங்கள் புத்திசாலிகள், நீங்கள் குருடரல்ல. விரோத மனப்பான்மை கொண்டு இவைகளைக் கூறுவதாக நீங்கள் எண்ணி விடவேண்டாம். இவை உங்களுக்கு ஜீவனாய் இருப்பதனால் உங்களுக்குச் சொல்கின்றேன். இவை சரியென்னும் உறுதி எனக்குள் இருப்பதால் கூறுகின்றேன். நான் இவைகளை உங்களுக்கு எடுத்துரைக்காவிட்டால் ஆண்டவருக்குக் கணக்கொப்புவிக்க வேண்டும். தெய்வீக சுகமளித்த என் ஊழியம் ஜனங்களின் சிந்தையைக் கவர்வதற்கென்று ஏறெடுக்கப்பட்டது. அதை தொடர்ந்து இச்செய்தி வரும் என்று எனக்குத் தெரியும். அது வந்துவிட்டது. ஏழு முத்திரைகள் திறக்கப்பட்டு இரகசியம் வெளியான போதுதான் இச்செய்தி வந்தது. இங்குள்ளவரில் சிலர் அது வெளிப்பட்டபோது என்னுடன் இருந்தனர். “ஐயன்மீர் இதுவா சமயம்?'' என்னும் என் செய்தியை நீங்கள் கேட்டிருக்கின்றீர்கள். அன்று காலை, எனக்கு முன்னமே அறிவிக்கப்பட்டிருந்த அதே இடத்தில், ஏழு தூதர்கள் பரலோகத்திலிருந்து இறங்கி வந்தனர். அவர்கள் சுழற்காற்றில் மேலே சென்றதை நாங்கள் கண்கூடாகக் கண்டோம். விஞ்ஞானமும் அதை புகைப்படம் எடுத்தது. எல்லா நாடுகளுக்கும் அது சென்றது. மெக்ஸிகோவிலும் சென்றது. 91அதன் பிறகு நான் கவனித்துக் கொண்டிருந்தபோது... ஏழு சபை காலங்களின் செய்தியை நான் பிரசங்கிப்பதற்கு சற்று முன்னர், ஒரு பெரிய வேத பண்டிதரை நான் அணுகி, ''சகோதரனே, மனுஷகுமாரனுக் கொப்பானவராய், வெண் பஞ்சைப் போன்ற சிரசும் மயிரும் கொண்ட ஒருவரை வெளி 1:13-14 விவரிக்கின்றனவே அவர் யார்? அவர் வாலிபனாயிருந்தால், அவருக்கு வெண் பஞ்சைப் போன்ற மயிர் எப்படி இருக்கமுடியும்?'' என்று வினவினேன். அதற்கு அவர், ''அது அவருடைய மகிமையின் சரீரம்'' என்று விடையளித்தார். அது சரியான விடையாக எனக்குத் தோன்றவில்லை. நான் அறைக்குள் சென்று ஜெபம் செய்தபோது, கர்த்தர் எனக்கு அதன் இரகசியத்தைப் வெளிப்படுத்தினார். பாருங்கள், அவர் நியாயந்தீர்க்க வரும்போது, நீதிபதி அணிவது போன்ற வெண் மயிரைப் பெற்றிருந்தார். அவர் தேவனென்றும், அவர் ஒரு மனிதன் மாத்திரமல்லவென்றும், அவர் மாமிசத்தில் வெளிப்பட்ட தேவனென்றும் நான் பிரசங்கிப்பது எப்பொழுதும் என் வழக்கம். அவர் தேவன், தேவனின் அன்பு அவர் மூலமாய் இவ்வுலகில் வெளிப்பட்டது. தேவனுடைய அன்புதான் இயேசு. இயேசுவின் சரீரத்தில் யேகோவா குடிகொண்டிருந்தார். தேவத்துவத்தின் பரிபூரணம் எல்லாம் அவர் சரீரத்துக்குள் வாசமாயிருந்தது. தேவன் யாரென்பதை அவர் இயேசுவின் சரீரத்தின் மூலம் வெளிப்படுத்தினார். மணவாட்டியை அவருடைய இரத்தத்தினால் கழுவ வேண்டுமெனும் நோக்கத்துடன் அந்த சரீரம் மரணத்துக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டது. 92மணவாட்டி இரத்தத்தினால் கழுவப்பட்டு, அவள் பாவங்கள் மன்னிக்கப்பட்டது மாத்திரமல்ல, அவள் நீதிமானாக்கப்பட்டாள் (Justified). “நீதிமானாக்கப்படுதல்” என்பதின் அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா? உதாரணமாக, நான் குடிகாரன்; அனேக கெட்ட பழக்கங்களைக் கொண்டவன் என்னும் வதந்தியை ஒரு சகோதரன் கேட்டார் என்று வைத்துக் கொள்வோம், அது பொய்யென்று அவர் பின்னே கண்டுகொண்டு, என்னை அணுகி, “சகோதரன் பிரான்ஹாமே, நான் உங்களை மன்னிக்கிறேன்'' என்று கூறினால். நான் அவரிடம், “எதற்கு எனக்கு மன்னிப்பு? நான் தவறானதொன்றும் செய்யவில்லையே என்று விடையளிப்பேன்”. உண்மையில் நான் தவறான செயல்களில் ஈடுபட்டிருந்தால், எனக்கு மன்னிப்பு அவசியம். நான் மன்னிக்கப்பட்டுவிட்டாலும், நீதிமானாகக் கருதப்பட முடியாது. ஏனெனில் நான் குற்றம் புரிந்துள்ளேன். ஆனால் 'நீதிமானாக்கப்படுதல்' என்பது, நான் குற்றம் ஒருக்காலும் செய்யவேயில்லை என்னும் அர்த்தம் கொண்டது. நாம் நீதிமான்களாக்கப்பட்டோம். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்மைப் பாவமறச் சுத்திகரித்தது. அது தேவனுடைய மறதி என்னும் புத்தகத்தில் போடப்பட்டுவிட்டது. அவர் மாத்திரமே அங்ஙனம் செய்ய முடியும். நாம் மற்றவரின் பாவங்களை ஒருக்கால் மன்னிக்கலாம். ஆனால் அவைகளை நம்மால் மறக்கமுடியாது. ஒருவர் செய்த குற்றங்களை நான் மன்னிக்கக் கூடும்; ஆனால் அவர் தீங்கிழைத்தாரே என்னும் எண்ணம் என் நினைவில் வந்து கொண்டேயிருக்கும். அப்படியானால் அவரை நான் மன்னித்துவிட்டேனேயல்லாமல், அவரை நீதிமானாக்கவில்லை. ஆனால் தேவனுடைய பார்வையில் மணவாட்டி நீதிமானாக்கப்பட்டிருக்கிறாள். அதாவது அவள் அந்த பாவங்களை முதலாவது செய்யவேயில்லை. ஆமென். அவள் பண்புள்ள தேவகுமாரனை விவாகம் செய்து கொண்டு அங்கே நிற்கிறாள். முதலாவதாக அவள் பாவமே செய்யவேயில்லை. அவள் அந்த வலையில் அகப்பட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் சத்தியத்தைக் கேட்டு ஏற்றுக் கொண்டபோது, இயேசுவின் இரத்தம் அவைகளைக் கழுவினது. அவள் கணக்கில் எந்த பாவமும் இல்லாதபடி பண்புள்ளவளாய் இருக்கிறாள். 93எனவே, செய்தி மணவாட்டியை ஒன்று கூட்டி சேர்க்கிறது. பாருங்கள்!ஆரவாரம் மற்றும் எக்காளம். உரத்த சத்தமாய் கூப்பிட்ட அவரே தான், அவர் உரத்த சத்தமாய் கூப்பிட்டு, லாசருவை எழுப்பினார். “லாசருவே, வெளியே வா,” என்று உரத்த சத்தமாய் அவர் கூப்பிட்டார். பாருங்கள்! அந்த சத்தம் நித்திரை செய்யும் மரித்த, நித்திரையிலிருக்கும் மணவாட்டியை எழுப்பும். எக்காளம், எக்காளம் சத்தமிடும்போது, அது அவ்விதமாய் செய்யும்போது, அது… அழைக்கும். எக்காளப் பண்டிகைக்கு அழைக்கிறதாய் இருக்கிறது, அதுதாமே பெந்தெகோஸ்தே பண்டிகையாயிருக்கிறது, வானத்தில் நடக்கும் அந்த பெரிய பண்டிகையும் மற்றும் எக்காளப் பண்டிகை… ஆனால் இப்பொழுது எக்காளம் ஒன்றாக கூடி வருவதையும், பண்டிகைக்கு அழைப்பதையும் செய்வதில்லை. இப்பொழுதோ அது வானத்தில் நிகழப்போகும் ஆட்டுக்குட்டியானவரின் விருந்தாய் (supper) இருக்கிறது. இப்பொழுது, கவனியுங்கள், அதுதாமே மணவாட்டியின் கூடிவருதலும், எக்காள பண்டிகையாகவும், கலியாண விருந்தாயும் இருக்கிறது. அதை நாம் மாதிரிகளில் பார்த்திருக்கிறோம். இப்பொழுது, நாம் முடிப்பதற்கு முன்னர் சற்று கவனியுங்கள். கவனியுங்கள், அதை நாம் மாதிரிகளில் பார்த்திருக்கிறோம். 94'எடுத்துக் கொள்ளப்படுதல்' என்பதை நாம் அடையாளங்களாகக் கண்டிருக்கிறோம். எதையும் உறுதிப்படுத்த மூன்று சாட்சிகள் வேண்டுமென மத்தேயு 18:16 உரைக்கின்றது. “அவன் செவிகொடாமற் போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும் படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக் கொண்டு போ'' மத்.18:16 சாட்சியிடுகிறவர்கள் மூவர் என்று 1யோவான் 5:7 கூறுகின்றது. ''பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே. இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள். ''உண்மை என்று உறுதிப்படுத்தும் முறை அதுவே. எந்த ஒரு செயலும் உண்மையென்று மூன்று சாட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும். எந்த ஒரு வாக்கும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் மூலம் நிலைவரப்பட வேண்டும். பழைய ஏற்பாட்டில் எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்த மூன்று சம்பவங்களைக் காணலாம். ஆகவே, அது ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. முதலாவதாக ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். இரண்டாவதாக எலியா; மூன்றாவதாக இயேசு. இயேசுவே பழைய ஏற்பாட்டுக்கும், புதிய ஏற்பாட்டுக்கும் இடையேயுள்ள பொறுப்புக் கல் (Keystone) ஆவார். அவையிரண்டையும் இணைத்தவர் அவரே. அவர் முதலில் மரித்து, பின்பு உயிரோடெழுந்து, எடுத்துக் கொள்ளப்பட்டார். ஏனோக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். எலியா அக்கினி மயமான ரதத்தில் ஏறி, சுழற்காற்றில் எடுத்துக் கொள்ளப்பட்டான். இயேசுவானவர் மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிரோடெழுந்து, சில நாட்கள் இவ்வுலகில் வாசம் செய்து, அதன் பின்பு எடுத்துக் கொள்ளப்பட்டார். அவரே மையமானவர். இவர் மூவரும் “எடுத்துக் கொள்ளப்படுதல்” நிகழ்ச்சிக்கு சாட்சிகளாயிருக்கின்றனர். 95புதிய ஏற்பாட்டில் ஏற்கனவே 'எடுத்துக் கொள்ளப்படுதல்', ஒருமுறை நிகழ்ந்துவிட்டதென்பதை அறிவீர்களா? இப்போது ஏற்கனவே ஒரு எடுத்து கொள்ளப்படுதல் நடந்து முடிந்துவிட்டது. உங்களுக்கு அது தெரியுமா? அதை நம்மால் துரிதமாக படிக்க முடியாத பட்சத்தில், நம் அதை சற்று பார்க்கலாம். மத்தேயு 27-ஆம் அதிகாரம், 45-ஆம் வாசனத்தை நாம் பார்க்கலாம். நம்மால் அதை அவ்வளவு துரிதமாக பார்க்க முடியுமா? மற்றும் நமக்கு அது துரிதமாக உதவி செய்யும் வகையில் அதிலிருந்து ஒரு சிறிய காரியத்தை நம்மால் எடுக்க முடியுமா என்று பார்க்கலாம். 27 மற்றும் 45 என்று இங்கே நான் எழுதி வைத்திருகிறேன் என்று நான் நம்புகிறேன். நாம் படிக்கலாம். ஆறாம் மணி நேர முதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு; ஏலி! ஏலி! லாமா சபக்தானி என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம் அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது; இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். மற்றவர்களோ, பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ பார்ப்போம் என்றார்கள். இயேசு, மறுபடியும் மகா சத்தமாய் கூப்பிட்டு, ஆவியைவிட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கிக் கீழ் வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. அவர் உயிர்த்தெழுந்த பின்பு, இவர்கள் கல்லறைகளை விட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள். மத். 27: 45-53 96'எடுத்துக் கொள்ளப்படுதல்' ஒரு முறை புதிய ஏற்பாட்டின் காலத்தில் நிகழ்ந்துவிட்டது. பழைய ஏற்பாட்டில் தேவனுடைய வார்த்தையினால் ஆயத்தமாக்கப்பட்டவர்கள் வெவ்வேறு மூன்று காலங்களில் எடுத்துக் கொள்ளப்பட்டனர். ஏனோக்கிற்கு தேவனுடைய வார்த்தை உண்டானது. எலியாவுக்குத் தேவனுடைய வார்த்தை உண்டானது. அவன் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தான். இயேசு தேவனுடைய வார்த்தையாகவே இருந்தார். பாருங்கள்? பழைய ஏற்பாட்டில், இப்போது இந்த முதல் எடுத்துக் கொள்ளப்படுதல் நடந்த போது, இந்த பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களை கவனிப்போம். 50-ஆம் வாசனத்தை கவனியுங்கள், இயேசுவை - இல்லை லாசருவை எழுப்பின பெரிய சத்தம், சரியாக அதே பெருத்த சத்தம் பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்களை எழுப்பினது. இரண்டாவது எடுத்து கொள்ளப்படுதல், IIதெசலோனிக்கேயர் 4-ஆம் ஆதிகாரத்தில் நிறைவேறுகிறது. அதை நாம் சற்று பார்க்கலாம்... அதை நாம் சில நிமிடங்களுக்கு முன் படித்தோம், பாருங்கள். ''அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து...'' அது 1தெச: 4:12-18-ல். அது இரண்டம் எடுத்துக்கொள்ளப்படுதல். இரண்டம் எடுத்துக்கொள்ளப்படுதல், மணவாட்டி எடுத்துக்கொள்ளப்படுதலாய் இருக்கிறது. 97பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்கள் அவருடைய சமூகத்தை அடைந்துவிட்டனர். அவர்கள் ஆட்டுக்குட்டியைப் பலியாகச் செலுத்தி, பழுதற்ற ஆட்டுக்குட்டியைப் பலியாகச் செலுத்தி, பழுதற்ற ஆட்டுக்குட்டியானவர் ஜனங்களின் பாவ நிவர்த்திக்காக பலி செலுத்தப்படுவார் என்னும் அவர்கள் விசுவாசத்தை அதன் மூலம் அறிக்கை செய்தனர். அதன் விளைவாக அவர்கள் பரதீசை அடைந்து, பூரண பலி செலுத்தப்படும் வரை காத்திருந்தனர். இயேசு உரத்த சத்தமாய் ஆவியை விட்டபொழுது, பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்கள் உயிரோடெழுந்தனர். அவர் மரித்தபோது பலியானது பரிபூரணப்பட்டது. அதனால் பரதீசு காலியாகப் போனது. பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்கள் மறுபடியும் இவ்வுலகில் வந்து, ஜனங்களிடையே நடமாடி, இயேசு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அவருடன் கூட எடுத்துக் கொள்ளப்பட்டனர். 98தாவீது அங்கே சொன்னான், வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள், அநாதி கதவுகளே உயருங்கள்“ ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். இதோ அவர்கள் வருகின்றனர். இயேசு சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி வழிநடத்திச் செல்கின்றார். பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்கள் அணிவகுத்து புதிய வாசல்கள் வரை சென்று, ''வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்'' என்கின்றனர். அப்பொழுது உள்ளேயிருந்து ஒரு சத்தம், “யார் இந்த மகிமையின் ராஜா?'' என்று கேட்க அவர்கள், “அவர் வல்லமையும் பராக்கிரமமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே” என்று விடையளிக்கின்றனர். வாசல்கள் வேகமாகத் திறந்தன. ஜெயவீரர் இயேசு, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, அவர்களை உள்ளே நடத்துகின்றார். அவர் பேரில் விசுவாசம் கொண்டவர்களிடம் தேவனுடைய வார்த்தை வந்தது. காத்திருந்த பழைய ஏற்பாட்டின் பரிசுத்தவான்களை அவர் அழைத்துக் கொண்டு உன்னதத்திற்கு ஏறினார். 'எடுத்துக்கொள்ளப்படுதல்' ஏற்கனவே ஒருமுறை நிகழ்ந்துவிட்டது. அடுத்த 'எடுத்துக்கொள்ளப்படுதல்' IIதெசலோனிக்கேயர் 4-ம் அதிகாரத்தில் கூறியுள்ளபடி, சபைக்கு, மணவாட்டிக்கு சம்பவிக்கும். மரித்தோர் உயிரோடெழுவார்கள். உயிரோடிருப்பவர் உயிர்த்தெழுந்தவர்களுடன் மகிமைக்குள் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். ''...கர்த்தருடைய வருகை மட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக் கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும் தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கி வருவார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டு போக மேகங்கள் மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம். IIதெச. 4: 15 - 17 99அன்றொரு நாள் நான் இளைய மகன் ஜோசப்புடன் வீதியின் முனையில் நின்றுகொண்டு இராணுவத்தின் நாளன்று நடைபெற்ற அணிவகுப்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது முதலாம் உலக மகா யுத்தத்தில் உபயோகிக்கப்பட்ட பீரங்கிகள் பவனி சென்றன. அவைகளைத் தொடர்ந்து இரண்டாம் உலக மகாயுத்தத்தில் உபயோகித்த ஷெர்மன் பீரங்கிகளும், அவைகளுக்குப் பின்னால் இராணுவ வீரர்களும், தங்க நட்சத்திரப் பதக்கம் பெற்ற தாய்மார்களும் அணிவகுத்து சென்றனர். அப்பொழுது அலங்கரிக்கப்பட்ட வண்டி (Float) ஒன்று வந்தது. அதன் முன்பாகத்தில் அறியப்படாத இராணுவ வீரனின் கல்லறை ஒன்று காண்பிக்கப்பட்டிருந்தது. ஒருபுறம் ஒரு மாலுமியும், மறுபுறம் ஒரு இராணுவ வீரனும் அதனைக் காவல் காத்தனர். அந்த வண்டியின் மற்றொரு பாகத்தில் தங்க நட்சத்திரம் பதக்கம் பெற்ற ஒரு தாயார், யுத்தத்தில் மரித்துப் போன தன் மகனுக்காகத் துக்கிப்பது போலவும், ஒரு இளம் விதவை யுத்தத்தில் மரித்த தன் கணவனுக்காக மேசை மீது தலை வைத்து அழுது கொண்டிருப்பதையும் போலவும், அவளருகில் தகப்பனை இழந்த அவள் மகன் கண்கலங்கி நிற்பது போலவும் காண்பிக்கப்பட்டிருந்தது. என்னே பரிதாபம் என்று நான் நினைத்தேன். நான் கவனித்துக் கொண்டே இருக்கும்போது, ஊனமுற்ற வயது சென்ற இராணுவ வீரர்கள் பெருமையுடன் தங்கள் இராணுவ உடைகளைக் காண்பித்துக் கொண்டு அணிவகுத்து செல்வதைக் கண்டேன். அவர்கள் அமெரிக்கர்கள் என்பதில் பெருமை கொண்டனர். அப்பொழுது நான், ''ஆண்டவரே“, 100ஒரு நாள் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகும். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் உயிரோடெழுந்திருப்பார்கள். இது நிகழக் காத்துக் கொண்டிருந்த முன்பிருந்த சபை காலங்களின் பரிசுத்தவான்கள் உயிரோடெழுந்து தங்கள் கல்லறைகளை விட்டு வெளியே வருவார்கள். அப்பொழுது உயிரோடிருக்கும் நாமும் அவர்களுடன் அணி வகுத்து ஆகாயத்துக்குள் செல்வோம். இந்த அழிவுள்ள சரீரங்கள் அவருடைய மகிமையின் சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படும் என்று எண்ணிக் கொண்டேன். எடுத்துக் கொள்ளப்படுதலானது நம் முன்னிருக்கும் இந்நாட்களில் பரலோகத்தை நோக்கிப் புறப்படும் அக்காட்சி எத்தகைய பவனியாயிருக்கும் என்பதை சிந்தனை செய்து பாருங்கள். ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் தங்கள் மார்புகளில் பூசப்பட்டதையும், அவர்கள் காலத்து செய்திக்காக உண்மையாக வாழ்ந்ததையும் பெருமையாய் மற்றவர்களுக்குக் காண்பித்து அணிவகுத்து செல்வார்கள். சகோதரரே, வரப்போகும் அந்த எடுத்துக் கொள்ளப்படுதலின் நோக்கத்திற்காக நாம் ஆவலுடன் எதிர் நோக்கியிருக்கிறோம். பாருங்கள், நாம் முடிக்கும் முன் இதை கவனியுங்கள். முதலாம் எடுத்துக் கொள்ளப்படுதல் நிகழ்ந்துவிட்டது. இரண்டாவது இப்போது நம் அருகில் உள்ளது. 'எடுத்துக் கொள்ளப்படுதல்' மூன்றாம் முறை நிகழும். வெளி. 11: 11-12-ல் கூறப்பட்ட இரண்டு சாட்சிகள் எடுத்துக் கொள்ளப்படுவார்கள். மூன்றரை நாளைக்குப் பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவ ஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது. அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களை பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று. இங்கே ஏறி வாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள். வெளி.11:11-12. இவ்விரு சாட்சிகளும் கிறிஸ்துவின் ஆவியைப் பெற்றவர்களாய் மறுபடியும் வந்து, யோசேப்பு தன் சகோதரருக்குச் சாட்சியாக இருந்தது போல், இவர்களும் யூதர்களுக்குச் சாட்சிகளாக இருப்பார்கள். அவர்களுடைய பிரேதங்கள் மூன்றரை நாட்கள் வீதிகளில் கிடக்கும். அதன் பின்பு ஜீவ ஆவி அவர்களுக்குள் பிரவேசித்து அவர்கள் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள். 'எடுத்துக் கொள்ளப்படுதல்' பழைய ஏற்பாட்டின் காலத்தில் மூன்று முறை நிகழ்ந்தது. புதிய ஏற்பாட்டின் காலத்திலும் அது மூன்று முறை நிகழும். பரிசுத்தவான்களின் எடுத்துக் கொள்ளப்படுதலுக்காக நாம் காத்திருக்கிறோம். 'எடுத்துக் கொள்ளப்படுதல்' நிகழும் என்று வேதாகமத்தில் உரைக்கப்பட்டுள்ளதால், அது நிகழும் என்பது உறுதி. கர்த்தர் கூறின அனைத்தும் நிறைவேறும். வானமும் பூமியும் ஒழிந்து போம்; அவர் வார்த்தையோ ஒருக்காலும் ஒழிந்து போவதில்லை. 101“வெளிச்சம் உண்டாகக் கடவது'' என்று கர்த்தர் ஆதி.1:3-ல் கட்டளையிட்டார். அவ்வாறே, ”ஒரு பனைமரம் தோன்றக் கடவது'' ''ஒரு ஒக் (Oak) மரம் உண்டாகக்கடவது என்றும், 'ஒரு பாலைவனம், ஒரு மலை உண்டாகக்கடவது' என்றும் அவர் கட்டளையிட்டார். அவர் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் நிறைவேற வேண்டும். எனவே அவர் கட்டளையிட்ட யாவும் நிறைவேறின. வெளிச்சம் உண்டானது. மலைகளும் பாலைவனங்களும் தோன்றின. ஒரு நாள் அவர் தனது மக்களை எகிப்தினின்று வெளியே அழைத்தார். அவர் அக்கினி ஸ்தம்பத்தில் மோசேயுடன் பேசினார். பரிசுத்த அக்கினி, வெளிச்சம். இஸ்ரவேல் ஜனங்கள் மோசேயை விசுவாசிக்கவில்லை. ''ஜனங்கள் மோசேயை விசுவாசிக்கவில்லை. கர்த்தர் அவனிடம், ''ஜனங்களை மலையின் அடிவாரத்துக்குக் கொண்டு வா'' என்று கட்டளையிட்டார். அன்று காலை அந்த மலை தேவனுடைய பிரசன்னத்தினால் அக்கினியும் இடியும் கலந்த தோற்றமளித்தது. ஜனங்கள் பயந்துபோய், “கர்த்தர் எங்களுடன் பேச வேண்டாம்; நாங்கள் மடிந்து போவோம், மோசே எங்களுடன் பேசட்டும்'' என்றனர். அப்பொழுது கர்த்தர், “இனி நான் அவர்களுடன் நேரடியாக பேச மாட்டேன் ஒவ்வொரு முறையும் ஒரு தீர்க்கதரிசியை நான் எழுப்பி அவன் மூலம் பேசுவேன். அவன் உரைப்பது நிறைவேறினால், அவனுக்குச் செவிகொடுங்கள். நான் அவனுடன் இருக்கிறேன்'' என்றார். மோசேயின் வார்த்தைகள் அனைத்தும் நிறைவேறின. 102ஏசாயா தீர்க்கதரிசியைக் கவனியுங்கள். உசியா ராஜா அவன் பேரில் அபிமானம் வைத்திருந்தான். உசியா ராஜா ஒரு முறை போதகரின் ஸ்தானத்தை விசுவாசிக்க முயன்ற காரணத்தால் அவன் குஷ்டரோகியானான் வியாபாரிகளே நான் இதைக் குறித்து முன்னமே எச்சரிக்கை செய்திருக்கிறேன். போதகரின் ஸ்தானத்தை வகிக்க நீங்கள் முயல வேண்டாம். உங்கள் ஸ்தானத்தில் நீங்கள் நிலைத்திருந்து கர்த்தர் உங்களிடம் செய்யக் கூறின யாவையும் செய்து முடியுங்கள். சரீரத்தில் ஒரு விரலாக மாத்திரம் நீங்கள் இருக்க வேண்டுமென்று நியமிக்கப்பட்டிருந்தால், காது என்னும் உறுப்பாக உங்களால் ஆக முடியாது. அவ்வாறே ஒரு மூக்கு கண்ணாக ஆகிவிட முடியாது. உங்கள் ஸ்தானத்தில் நீங்கள் நிலைகொண்டிருங்கள். “தேவ சித்தத்திற்கு புறம்பாக அவருக்கொரு சேவை செய்தல்” என்னும் செய்தியை நீங்கள் கேட்டதுண்டா? அரசனாக அபிஷேகம் பெற்ற தாவீது ராஜா தேவனுடைய உடன்படிக்கை பெட்டியைக் கொண்டு வரத் தீர்மானித்தான். ஆனால் இதைக் குறித்து அக்காலத்திலிருந்த தீர்க்கதரிசியிடம் அவன் ஆலோசனை கேட்கவில்லை. இதன் விளைவாக ஒருவன் மரித்துப் போனான். எல்லாமே குழப்பமாகிவிட்டது. கர்த்தருக்கு உபகாரம் செய்ய நீங்கள் முயல வேண்டாம். அவர் நியமித்த தருணம் வரும் வரை காத்திருங்கள். அவர் தமக்கு விருப்பமான முறையில் அதை செய்யட்டும். “இந்தப் பெரிய காரியத்தை நான் செய்யப் போகிறேன்” என்று நீங்கள் கூறலாம். ஆனால் சகோதரனே, கவனமாயிரு. 103தாவீது செய்தது தவறென்று அவனுக்குத் தெரியும். அக்காலத்தில் நாத்தான் தீர்க்கதரிசி இருந்தான். அவனுடைய ஆலோசனையைத் தாவீது பெறவில்லை. அதற்குப் பதிலாக அவன் நூற்றுக்கதிபதிகளையும் ஆயிரத்துக்கதிபதிகளையும் கலந்து ஆலோசித்தான். ஜனங்கள் தேவனுடைய உடன்படிக்கை பெட்டியைக் கண்டு, ஆரவாரம் செய்து, உணர்ச்சி வசப்பட்டனர். ஆயினும், அது தேவனுடைய வார்த்தைக்கு ஒவ்வாத ஒரு செயலாய் அமைந்திருந்தது. எனவே அது தோல்வியுற்றது. தேவனுடைய வார்த்தைக்கு இணங்காத அனைத்தும் இவ்வாறே தோல்வியுறும். கர்த்தருடைய வார்த்தை மாத்திரமே நிலைநிற்கும், “வானமும் பூமியும் ஒழிந்து போம், அவருடைய வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை”. 104பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசி என்னும் புத்தியசாலியான வாலிபனின் மேல் வந்த போது, பரிசுத்த ஆவியானவர் உரைத்ததற்கு மாறாக அவனால் ஒன்றையும் சொல்ல முடியவில்லை. அவன், ''இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள் என்று தீர்க்கதரிசனம் உரைத்தான். ''நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார், கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும். அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர், வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப் பிரபு என்னப்படும்'' கர்த்தத்துவம் அவர் தோளின் மேலிருக்கும். அவர் ஆளுகைக்கு முடிவில்லை. புத்திசாலியான ஒரு வாலிபன் ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள் என்று எங்ஙனம் கூற முடியும்? ஆனால் அது கர்த்தர் உரைக்கிறதாவது என்பதாய் இருந்தது. அது தேவனுடைய வார்த்தையாயிருந்தபடியால், அது நிறைவேற வேண்டும். ஜனங்கள் அந்த சம்பவத்தை எதிர்நோக்கியிருந்தனர். ஆதியாகமத்தில் அவர் கட்டளையிட்ட அனைத்தும் எவ்வாறு நிறைவேறினதோ, அது போன்று இதுவும் நிறைவேற வேண்டும். அவர் நிலத்தடியில் விதைகளைப் புதைத்த போது பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது. எங்கும் அந்தகாரம் சூழ்ந்திருந்தது. ஆயினும் அவர் கட்டளையிட்டவை நிறைவேறின. ஏசாயா தீர்க்கதரிசினம் உரைத்து 800 ஆண்டுகள் கழித்து ஒரு கன்னிகை தேவனால் உண்டாக்கப்பட்ட வித்தின் மூலம் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்றாள். அந்த குமாரன் தான் ஒரு நாள் ஒரு கல்லறையின் முன் நின்று, “லாசருவே, வெளியே வா” என்று கூறினார். மரித்து நான்கு நாட்களாகி நாற்றமெடுத்து போன அம்மனிதன் அவர் கட்டளைக்கு இணங்கி கல்லறையைவிட்டு வெளியே வந்தான். இயேசு மேலும் இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம். ஏனென்றால் பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், (ஆமென்) அப்பொழுது... எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். என்று கூறியுள்ளார். அவர் இதைக் கூறியிருப்பதால் அது நிச்சயம் நிகழவேண்டும். 'எடுத்துக் கொள்ளப்படுதல்' என்னும் சம்பவம் நிகழ்வது உறுதி. ஓ, என்னே! 105கலிபோர்னியாவில் நான் கடைசியாக அளித்த செய்தி என் நினைவுக்கு வருகின்றது. நான் மறுபடியும் அங்கு போகமாட்டேன் என்று நினைத்தேன். லாஸ் ஏஞ்சலிஸ் கடலுக்குள் ஒரு நாள் மூழ்கிவிடும் என்று நான் அங்கு முன்னறிவித்தேன். அது கர்த்தர் உரைத்ததாவது! ஆகவே அது நிச்சயம் நிறைவேறும். அவளுடைய முடிவு நெருங்கிவிட்டது. அது எப்பொழுது நேரிடும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அது நிகழுமென்பது உறுதி. நான் அவ்விதம் உரைத்தபின்பு நிலநடுக்கங்கள் உண்டாகி அந்தப் பட்டினத்தை அசைத்தன. தூதன் இறங்கி வந்தபோது உங்களில் சிலர் அந்தக் குன்றின் மேல் நின்று கொண்டிருந்தீர்கள். அப்பொழுது வெளிச்சம் உண்டாகி, நாம் நின்று கொண்டிருந்த குன்றைச் சுற்றிலும் அக்கினி விழுந்தது. அப்பொழுது கற்பாறைகள் பிளவுபட்டு, உடைந்து, நம்மைச் சுற்றிலும் விழுந்தன. மூன்று முறை வானத்திலிருந்து இடிமுழக்கம் உண்டானது. அப்பொழுது நான், “மேற்கு கடற்கரையின் மேல் நியாயத்தீர்ப்பு விழும்'' என்று அறிவித்தேன். இரண்டு நாட்கள் கழித்து அலாஸ்கா ஏறக்குறைய தண்ணீரில் மூழ்கிவிட்டது. 106இதை உரைத்த அதே தேவன், லாஸ் ஏஞ்சலிஸ் அழிந்துவிடும் என்று உரைத்துள்ளார். அது எப்பொழுது நேரிடும் என்று என்னால் கூற முடியாது. அதை நான் கூறினேனா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இங்கே இருக்கிற இந்த சகோதரன் என்று நான் விசுவாசிக்கிறேன், அது... இல்லை, மோசலிஸ்களில் (Moseleys) ஒருவர், அங்கே இருக்கும் அந்த தெருவுக்கு கொண்டு சென்றார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அதை திருப்பி பார்க்கும் வரைக்கும் அது என்னவென்று நான் அறியாமல் இருந்தேன். நான் வேத வசனத்தை திருப்பி பார்த்து, அங்கே இயேசு, ''கப்பர்நகூமே, கப்பர்நகூமே, எத்தனை முறை... வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாள பரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும்,'' என்றார். ஏறக்குறைய அதிலிருந்து நூற்றி ஐம்பது வருடங்களுக்கு பிறகு - சோதோம் ஏற்கனவே பூமியில் இருந்தது - அன்றைக்கு இருந்த கப்பர்நகூம் இன்றைக்கும் தண்ணிருக்குள் இருக்கிறது. 107இவையனைத்தும் உரைத்து நிறைவேற்றின அதே தேவ ஆவியானவர், ''தூதர்களின் பெயரை (லாஸ் ஏஞ்சலிஸ்) சூடிக் கொண்டிருக்கும் கப்பர்நகூமே, நீ எவ்வளவாக உன்னை வான பரியந்தம் உயர்த்திக் கொண்டாய்! நீ சாத்தானின் உறைவிடமாக இருக்கின்றாய். போதகர்களின் கல்லறைத் தோட்டமாக நீ அமைந்திருக்கிறாய். நல்லவர்கள் உன்னிடம் வந்தால் அவர்கள் எலிகளைப் போல் மாண்டு போகின்றனர். உனக்கு என்ன நேர்ந்தது? “தூதர்களின் பெயரால் உன்னை அழைத்துக் கொள்பவளே! உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமில் செய்யப்பட்டிருந்ததானால், அது இன்று நிலைத்திருக்கும் உன் நேரம் வந்துவிட்டது'' என்று கூறுகின்றார். நான் கூறினது நிறைவேறாமல் போனால், என்னைக் கள்ளத் தீர்க்கதரிசியாகக் கருதுங்கள். 108இத்தரிசனம் தோன்றின தினத்தின் முந்நாள் இரவில், மணவாட்டி அணிவகுத்து செல்லும் காட்சியை முன்கூட்டியே நான் தரிசனத்தில் கண்டேன். ஒரு அழகிய பெண்மணி ஒழுங்காக ஆடையணிந்து இந்தப் பக்கம் அணிவகுத்து சென்றாள். அத்தரிசனத்தில் ஒருவர் என்னருகில் நின்று கொண்டிருந்தார். அவர் என்னிடம், “மணவாட்டியின் அணிவகுப்பின் முன்னதான காட்சி (Preview)'' என்றார். அவள் ஒரு பக்கம் வந்து மறுபக்கம் சென்றாள். மற்றொரு பக்கத்திலிருந்து ஆசிய சபை வருவதைக் கண்டேன். அதைக் காண ஆபாசமாக இருந்தது. அதன் பின்னர் ஐரோப்பிய சபை வந்தது. அதுவும் அதே நிலையில் இருந்தது. அதன் பின்பு ராக் அண்டு ரோல் (Rock and Roll) இசை கேட்டது. அந்த இசைக்கு ஏற்ப நடனமாடி அமெரிக்க சபை வந்தது. அவள் ஆடை எதுவும் அணிந்திருக்கவில்லை. செய்தித்தாள் போன்ற ஒன்றை அவள் முன்பாகத்தில் பிடித்துக் கொண்டிருந்தாள். ராக் அண்டு ரோல் இசைக்க நடனமாடிக் கொண்டே சென்றது அந்த அமெரிக்க சபை. அவர் சமூகத்தில் நான் நின்றவனாய், “ஒரு போதகன் என்னும் முறையில் இதை மாத்திரமா என்னால் சாதிக்க முடிந்தது? நான் விலகிக் கொள்ள விரும்புகிறேன். போதகர்கள் நாங்கள் அனைவரும் ஒருங்கே இதைத்தானா சாதிக்க முடிந்தது?'' என்று கவலையுடன் கூறினேன். 109அந்த பெண்கள் கடந்து செல்லும்போது ராக் அண்டு ரோல் இசைக்கு ஏற்றவாறு ஆபாச நடனங்களைப் புரிந்தனர். அவர்களுக்குக் குறுகிய கூந்தல் உண்டாயிருந்தது. அவர்கள் முகங்கள் வண்ணம் தீட்டப்பட்டிருந்தன. ஆயினும் அவர்கள் பண்புள்ளவர்களாகக் கருதப்பட்டனர். நான் வெட்கத்தால் தலையைத் திருப்பிக் கொண்டேன். முன்பாகத்தை மறைக்க ஏதோ ஒன்றை அவர்கள் தங்கள் கைகளில் பிடித்திருந்தனர். அவர்கள் பின்பாகமோ நிர்வாணமாய் இருந்தது. என்னே ஒரு அவமானமான செயல்! அதை என்னால் தாங்க முடியவில்லை. நான் தலையை மறுபக்கம் திருப்பிக் கொண்டு மிகவும் அழுதேன். அவரும் அங்கு நின்று கொண்டிருந்தார். இக்காலத்துக்கென்று நியமிக்கப்பட்ட சபையின் போதகனாக, இவ்வளவு மாத்திரமா அவருக்காக நான் சாதிக்க முடிந்தது. “ஆண்டவரே, என்னால் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியவில்லை, நான் மரிக்கட்டும், நான் விலகிவிடுகிறேன்'' என்று கதறினேன். அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஸ்தலத்தை அடைந்த பிறகு, கீழே சென்றுவிட்டனர். அப்பொழுது, “யுத்தம் செய்வோம் வாரும், கிறிஸ்து வீரரே” என்னும் பாட்டைக் கேட்டது போன்றிருந்தது. அப்பொழுது பரிசுத்தவான்களாகிய ஒரு பெண்மணி குழு, நீண்ட கூந்தல் தரித்து, ஒழுங்கான முறையில் ஆடையணிந்தவர்களாய், அணிவகுத்து வந்தனர். காண்பதற்கு அவர்கள் மிகவும் ஒழுக்கமுள்ளவர்களாகவும், சுத்தமாகவும் இருந்தனர். அவர்களுடைய கால் அசைப்பு (Step) சுவிசேஷத்திற்கு ஏற்றவாறு அமைந்திருந்தது. அவர்கள் தான் தேவனுடைய வார்த்தை. ஒவ்வொரு தேசத்திலிருந்து ஒரு நபர் மாத்திரமே அவ்வணியில் உள்ளது போல் தோன்றினது. அவர்கள் என்னைக் கடந்து சென்றபோது நான் கூர்ந்து கவனித்தேன். அவர்கள் மற்ற குழுக்களைப் போல் கீழே செல்லாமல், உயர சென்றனர். அவர்களில் இரண்டு அல்லது மூன்று நபர்கள் அணிவரிசையை விட்டு விலகிச் செல்வதை நான் கண்டேன். அப்பொழுது நான், “வரிசையில் செல்லுங்கள்'' என்று கூச்சலிட்டேன். அந்த தரிசனம் என்னை விட்டு அகன்ற பின்பும், 'வரிசையில் செல்லுங்கள்' என்று நான் அறையில் கூச்சலிட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்தேன். 110ஒருக்கால் இச்சம்பவம் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டதா? மணவாட்டி ஏற்கனவே அழைக்கப்பட்டு முடிந்துவிட்டதா? இப்பொழுது இதுதான் சம்பவித்துக் கொண்டு வருகின்றதா? மணவாட்டி கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக வார்ப்பிக்கப்பட வேண்டும். கிறிஸ்துதான் வார்த்தை, அதனுடன் நாம் ஒன்றையும் கூட்ட முடியாது. உதரணமாக, ஒரு கை மனித கையாகவும், மற்றொரு கை நாயின் பாதமாகவும் உள்ள எந்த ஒரு பெண்ணையும் நாம் காண்பதில்லை. அது தேவனுடைய வார்த்தையாகவே இருக்க வேண்டும். அவரே வார்த்தை. மனைவி கணவனின் ஒரு பாகமாக இருக்கிறாள். ஏனெனில் அவள் கணவனிலிருந்து எடுக்கப்பட்டவள். அவ்வாறே மணவாட்டியும் மணவாளனின்று எடுக்கப்பட்டவள். ஆகவே மணவாட்டியும் மணவாளனின் ஒரு பாகமாக இருக்கிறாள். ஏவாள் ஆதாமின் ஒரு பாகம். அவள் அவன் விலாவினின்று வெளியே எடுக்கப்பட்டவள். அது போன்று மணவாட்டியும் கிறிஸ்துவின் ஒரு பாகமாக இருக்கிறாள். அவள் ஸ்தாபனத்திலிருந்து எடுக்கப்படவில்லை. அவள் இக்காலத்துக்குரிய தேவனுடைய வார்த்தையினின்று எடுக்கப்பட்டவள். 111ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதல்: தேவ எக்காளம் தொனிக்கையில் கிறிஸ்துவுக்குள், மரித்தோர் எழுந்து அவர் உயிர்த்தெழுதலில் மகிமையைப் பகிர்ந்து கொள்வர். ஆகாயத்திற்கப்பால் உள்ள தங்கள் வீட்டில் தெரிந்து கொள்ளப்பட்டோர் ஒன்று சேர்கையில், மறுகரையில் கணக்கெடுப்பின் போது... (நண்பர்களே, நாமெல்லோரும் அங்கிருக்க முயற்சிப்போம்) கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. வார்த்தையானது உரைக்கப்பட்டாயிற்று; அது நிறைவேறியாக வேண்டும். அது நிறைவேறும். அருமையானவர்களே, யாரும் மரிக்க விரும்புவதில்லை. யாரும் அழிந்துபோக விரும்புவதில்லை. உங்கள் ஸ்தாபனங்களுக்கு நீங்கள் எவ்வளவு உத்தமமாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. அப்படி இருப்பது நல்லது தான். உங்கள் பேரில் எனக்கு எவ்வித விரோதமும் கிடையாது. நீங்கள் ஆலயத்திற்குச் செல்ல வேண்டும். நீங்கள் தொடர்ந்து செல்லுங்கள். ஆனால் உங்கள் பாரம்பரியங்களைத் தூர எறிந்து விட்டு, கிறிஸ்துவை நோக்கிச் சென்று, அவருக்குள் மறைந்து கொள்ளுங்கள். என்றாவது ஒரு நாளில் எக்காளம் தொனிக்கும். நீங்கள் எடுத்துக் கொள்ளப்படாவிடில் மிருகத்தின் முத்திரையை நீங்கள் அறியாமலேயே தரித்துக்கொள்ள நேரிடும். அப்பொழுது கால தாமதமாயிருக்கும். 112கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களை வெகு நேரம் காத்திருக்கும்படி செய்ததற்காக நான் வருந்துகிறேன். நான் உங்களை இங்கே வெகு நேரம் காத்திருக்கும்படி செய்தேன் என்பது ஞாபகமிருக்கட்டும்; அது உண்மை. நீங்கள் என்னைக் கேளாமலேயே, எனக்காக காணிக்கையெடுத்தீர்கள். நீங்கள் என்னை உபசரித்ததினால் செய்தீர்கள். நான் உங்களை காத்திருக்கும்படி செய்ததின் நிமித்தம், உங்கள் உணவு விடுதிக்கான பணத்தை அந்தக் காணிக்கையின் மூலம் செலுத்திவிடுங்கள். ஆகாயத்தில் எடுத்துக் கொள்ளப்படுதலைக் குறித்து, இன்னும் எட்டு அல்லது பத்து பக்கங்கள் நான் பேச வேண்டியதிருக்கிறது. ஆனால் அதை உங்களுக்கு எடுத்துச் சொல்ல எனக்கு நேரம் போதவில்லை. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் நேசிக்கிறீர்களா? நாம் எல்லோருமாக இப்பொழுது அமைதியாக, பயபக்தியுடன் எழுந்து நிற்போம். நான் உங்களுக்குக் கூறியவைகளை ஞாபகங் கொள்ளுங்கள். நாம் இப்பொழுது கடைசி மணி நேரத்திலிருக்கிறோம். நாடுகள் உடைகின்றன இஸ்ரவேல் விழித்தெழும்புகின்றது தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த அடையாளங்கள் இவை புறஜாதிகளின் நாட்கள் எண்ணப்பட்டுள்ளன. திகில் அவர்களை சூழ்ந்துள்ளது. மீட்பின் நாள் சமீபமாயுள்ளது மனிதரின் இருதயங்கள் பயத்தினால் சோர்ந்து போயுள்ளன பரிசுத்த ஆவியால் நிறையப்பட்டு உங்கள் விளக்குகளின் திரியை சுத்திகரியுங்கள் உங்கள் மீட்பு சமீபமாயுள்ளது, தலையுயர்த்தி நோக்குவீர் (நீங்கள் அதை அறிவீர்களா?) கள்ளத் தீர்க்கதரிசிகள் பொய்யுரைக்கின்றனர் தேவனின் சத்தியத்தை அவர்கள் மறுதலிக்கின்றனர் (அவையெல்லாம் உண்மையென்று நாம் அறிந்திருக்கிறோம் இல்லையா?) .............................................. நேசிக்கிறேன் நேசிக்கிறேன் முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில் அவரை உண்மையாக நேசிப்பவர்கள் கையை உயர்த்திக் காட்டுங்கள். நாம் மறுபடியுமாக இதைப் பாடும் பொழுது, உங்களருகிலுள்ளவரிடம் கைகுலுக்கி, “யாத்ரிகரே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக'' என்று நீங்கள் அவரிடம் கூற வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நாம் அந்நியரும், பரதேசிகளுமல்லவா? நேசிக்கிறேன்... நேசிக்கிறேன் நேசிக்கிறேன் (அதுதான் மேஜையண்டையில்) முன்பு அவர் நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரியில் 113எடுத்துக் கொள்ளப்படுதலில் நீங்கள் இருக்க வேண்டுமா? ''தேவனே நான் அதிலிருக்க வேண்டும் என்று முழு இருதயத்தோடும் விரும்புகிறேன் என்று கூறி“, எடுத்துக் கொள்ளப்படுதலில் இருக்க விரும்புகிறவர் உங்களில் எத்தனை பேர்... தேவனின் மாறாத கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள் என்ற பாடலை எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்! தேவனின் மாறாத கரத்தைப் பற்றிக்கொள் தேவனின் மாறாத கரத்தைப் பற்றிக் கொள் உம் நம்பிக்கையை நித்திய காரியங்களின் மேல் கட்டு தேவனின் மாறாத கரத்தைப் பற்றிக் கொள் (நீங்கள் அதை விரும்புகின்றீர்களா?) நம் பயணம் முடியும் நேரத்தில் தேவனுக்காய் நாம் உண்மையாய் இருந்திருப்பின் அளவில்லா இன்பமுற்ற நம் ஆத்துமா பளிங்கும் சுத்தமுமான நம் மகிமையின் வீட்டைக் காணும் தேவனின் மாறாத கரத்தைப் பற்றிக் கொள் தேவனின் மாறாத கரத்தைப் பற்றிக் கொள் உன் நம்பிக்கையை நித்திய காரியங்கள் மேல் கட்டு தேவனின் மாறாத கரத்தைப் பற்றிக் கொள் இப்பொழுது நீங்கள் சிறிது நேரம் உங்கள் தலைகளை வணங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இவ்வுலகின் மாயமான ஐசுவரியத்தை இச்சியாதே அது விரைவில் அழிந்துபோம் பரலோகத்தின் பொக்கிஷத்தை அடைய தேடு அவை என்றென்றும் அழியாது தேவனின் மாறாத கரத்தைப் பற்றிக் கொள் தேவனின் மாறாத கரத்தைப் பற்றிக் கொள் உன் நம்பிக்கையை நித்திய காரியங்கள் மேல் கட்டு தேவனின் மாறாத கரத்தைப் பற்றிக் கொள் 114நீங்கள் தலைவணங்கியுள்ள நிலையில், இவ்வுலகின் ஐசுவரியம் ஒழிந்து போகும், எனவே அழிந்து போகாத பரலோகத்தின் பொக்கிஷங்களைத் தேட வேண்டும் என்னும் எண்ணம் உங்கள் உள்ளங்களில் பதியட்டும். நம் தலைகள் நாம் உண்டாக்கப்பட்ட மண்ணை நோக்கி வணங்கியுள்ளது என்றும், அந்த மண்ணுக்கு நாம் என்றாவது ஒரு நாள் திரும்ப வேண்டுமென்றும், ஆனால் நமக்குள் இருக்கும் ஆத்துமா நம்மை படைத்த தேவனுக்குக் கணக்கொப்புவிக்க வேண்டுமென்றும் நாம் அறிவோம். “இன்றிரவு எடுத்துக் கொள்ளப்படுதல் சம்பவிக்குமானால், அதற்கு நான் ஆயத்தமில்லை என்று உங்களில் யாராகிலும் கருதினால், உங்களை நாங்கள் எங்கள் ஜெபங்களில் நினைவு கூர வேண்டுமென்று ஆசித்தால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். ”சகோதரன். பிரான்ஹாமே, நான் ஆயத்தமாயில்லை. உண்மையில் நான் கிறிஸ்துவனாயிருக்க விரும்புகிறேன். அதற்காக எவ்வளவு முயன்றும் என்னால் முடியவில்லை. நான் அடைய வேண்டிய நிலையை இன்னும் அடையவில்லை. ஆண்டவரே, என் மீது இரங்கும். நான் கரங்களை உயர்த்தியுள்ளேன். கர்த்தாவே, என் மேல் இரங்குவீராக!'' என்று ஜெபியுங்கள். 115அருமை தேவனே, உயர்த்தப்பட்ட கரங்களின் இருதயங்களில் உள்ள சிந்தனைகளை நீர் அறிவீர். அவர்களுக்காக நான் வேண்டுதல் செய்கிறேன். நான் ஒன்றுக்கு மாத்திரம் உத்தரவாதி. அது தான் உம்முடைய சத்தியத்தை எடுத்தரைத்தலாகும். அருமை தேவனே, அவர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்று உண்மையில் விரும்புகின்றனர். அவர்கள் உணர்ச்சி வசப்படவோ, ஸ்தாபன முறைமைகளை அல்லது கோட்பாடுகளைப் பின்பற்றவோ விரும்பவில்லை. பிதாவே, கலப்படமற்ற தேவனுடைய வார்த்தையை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். மற்றவை யாவும் ஒழிந்துபோம், வானமும் பூமியும் கூட ஒழிந்துபோம், ஆனால் உம் வார்த்தையோ ஒரு போதும் ஒழிந்து போவதில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். நமது கால்களுக்குக் கீழேயுள்ள பூமி ஒழிந்துபோம். ஆனால் நாமோ மணவாளனின் மணவாட்டியாக, அந்த வார்த்தையாக இருப்பதால் ஒழிந்து போக முடியாது. பிதாவே, அவர்களுடைய இருதயத்தின் வேண்டுதல்களை அருளிச் செய்ய வேண்டுமென்று அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் ஜெபிக்கிறேன். இன்றிரவு, நான் நடுக்கமுற்றதற்காக என்னை மன்னியும். நான் தாமதித்து படுக்கையை விட்டு எழுந்தேன் என்பது உமக்குத் தெரியும். பலவீனம் காரணமாக வார்த்தைகள் தொடர்ச்சியாக எழவில்லை. எப்படியோ பரிசுத்த ஆவியானவராகிய நீர் உம் தெய்வீக முறையில் அவைகளை ஒன்று கோர்த்துவிட்டீர். அவைகளை ஜனங்களுடைய இருதயங்களில் பதியச் செய்யும். என் இருதயம், என் சிந்தனை, என் நோக்கம் அனைத்தும் உம்மையே பற்றிக் கொண்டிருக்கின்றது. கர்த்தாவே, இரட்சிக்கப்பட முடியும் என்னும் எண்ணம் கொண்டவர்களை இப்பொழுது நீர் இரட்சிக்கமாட்டீரா? நாங்கள் உம்மை நெருங்கி, வெகு விரைவில் நிகழவிருக்கும் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு ஆயத்தப்பட அருள்புரியும், இவைகளை இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, கூட்டத்தின் தலைவரிடத்தில் ஒப்படைப்போம்.